ஹோம் /நியூஸ் /கள்ளக்குறிச்சி /

கோயிலுக்குள் அனுமதி மறுப்பு... 100 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் வழிபாடு நடத்திய பட்டியலின மக்கள்!

கோயிலுக்குள் அனுமதி மறுப்பு... 100 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் வழிபாடு நடத்திய பட்டியலின மக்கள்!

கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்திய பட்டியலின மக்கள்

கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்திய பட்டியலின மக்கள்

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

கள்ளக்குறிச்சி அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலினத்து மக்கள் நுழைந்து வழிபாடு மேற்கொண்டனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழைமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் பட்டியலினத்து மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என பட்டியல் சமூக மக்கள் கடந்த 6 மாதங்களாக போராடி வந்தனர். இதனால் எழுந்த பிரச்சனையின் காரணமாக சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பட்டியலினத்து மக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதனையேற்று, பட்டியலினத்து மக்களை வரதராஜ பெருமாள் கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று வழிபாடு  செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சாதி மோதல்கள் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் பட்டிலின மக்கள் பாதுகாப்பாக கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினர். முதல் முறையாக கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர்.

- எஸ்.செந்தில்குமார், செய்தியாளர், கள்ளக்குறிச்சி

First published:

Tags: Dalit, Hindu Temple, Scheduled caste