முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / ஒரே வருடத்தில் கசந்த காதல் திருமணம்.. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை - கடிதம் சிக்கியது

ஒரே வருடத்தில் கசந்த காதல் திருமணம்.. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை - கடிதம் சிக்கியது

கள்ளக்குறிச்சி இளம்பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி இளம்பெண் தற்கொலை

Crime News : கள்ளக்குறிச்சியில் வரதட்சணை கொடுமையால் பச்சிளம் குழந்தையை பறிதவிக்க விட்டு இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்சா (25) இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் (27) என்கின்ற இளைஞரை காதலித்து தனது பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாகவும், தனது கணவர் தஸ்தகீரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி தனது தாய் வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அப்சாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை தனக்கு தூக்கம் வருவதாக கூறிவிட்டு வீட்டின் மேல் அறையில் ஓய்வெடுக்க செல்வதாக தாயிடம் கூறி சென்ற அப்சா மாலை தாயிடம் வந்து தனக்கு தூக்கம் வரவில்லை என்றும் நான் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இதைக்கேட்டுப் பதறிப் போன அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியோடு அவரை திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அப்சா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் அப்சாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த அப்சா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

இளம்பெண் அறையில் சிக்கிய கடிதம்:

தனது கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட 7 பேர் தன்னை வரதட்சணை கொடுமை செய்வதாகவும், பெண் பிள்ளை பெற்ற காரணத்தினால் என்னை வீட்டில் சேர்க்காமல், பெண் குழந்தையை கொல்லவும் சொல்கிறார்கள்.  பெண் குழந்தையை பெற்றெடுத்ததற்கு நான் என்ன செய்வேன். காலம் மாறிவிட்டது. பெண் பிள்ளையைப் பெற்ற காரணத்தினால் தன்னை அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாகவும் கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும், என் திருமண சீர் மற்றும் எனது போன் சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்று என் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நஷ்ட ஈடு இணை பெற்று என் குழந்தையின் வருங்காலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் இந்த கடிதத்தில் அப்சா எழுதியுள்ளார். மேலும் இதனையே தான் வீடியோவாக பதிவு செய்துள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read: சுங்கச்சாவடியில் பெண் ஊழியருக்கு கன்னத்தில் பளார் விட்ட நபர்.. கட்டணம் செலுத்த சொன்னதால் ஆத்திரத்தில் வெறிச்செயல்.. வைரலாகும் வீடியோ..

இந்நிலையில், அப்ஸாவின் தாயார் போலீசாரிடம் வரதட்சணை கொடுமை செய்து தனது மகளை தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், திருமண நடந்த ஒரு வருடத்திற்குள் நடைபெற்ற சம்பவம் என்பதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் கொண்டு செல்லப்பட்ட அப்சாவின் உடலை பெற்று வந்த அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இளம் பெண் மரணத்திற்கு காரணமான குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவரிடம் காவல்துறையினர் பெண் உயிரிழப்பு காரணமாக அனைவரையும் கைது செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

செய்தியாளர் : செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)

First published:

Tags: Crime News, Kallakurichi, Tamil News