ஹோம் /நியூஸ் /கள்ளக்குறிச்சி /

பெட்ரோல் பங்கில் கத்தியை காட்டி அடாவடி... சிசிடிவி காட்சியால் சிக்கிய குடிபோதை ரவுடிகள்..!

பெட்ரோல் பங்கில் கத்தியை காட்டி அடாவடி... சிசிடிவி காட்சியால் சிக்கிய குடிபோதை ரவுடிகள்..!

பெட்ரோல் பங்கில் கத்தியை காட்டி அடாவடி... சிசிடிவி காட்சியால் சிக்கிய குடிபோதை ரவுடிகள்..!

ஆட்டோவில் சென்ற கும்பல் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kalladaikurichi, India

  பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்காமல் கத்தியை காட்டி மிரட்டி பெட்ரோல் பங்க் ஊழியர்களை ஒரு கும்பல் தாக்கிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள தொப்பையன் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். கெடிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். கடந்த திங்கள் கிழமை இரவு பெட்ரோல் பங்கில் பணியில் இருந்துள்ளார்.அப்போது ஆட்டோவில் வந்த மூன்று பேர் , ஆட்டோ பெட்ரோல் டேங்கை முழுவதும் நிரப்பும்படி கூறியுள்ளனர்.

  பரமசிவமும் பெட்ரோல் டேங்கை நிரப்பிய பிறகு பில்லை கொடுத்து அதற்கான தொகையை ஆட்டோவில் வந்தவர்களிடம் கேட்டுள்ளார். திடீரென ஆட்டோவில் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வெளியே வந்த கும்பல் பணம் கொடுக்கமுடியாது என்று மிரட்டியுள்ளது. மேலும் பரமசிவத்தையும் தாக்கிய கும்பல் அப்போது பணியில் இருந்த அனைவரையும் கத்தியை காட்டி மிரட்டிச்சென்றது. சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  ஆட்டோவில் வந்த கும்பல் தாக்கியதால் படுகாயமடைந்த பரமசிவம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படார். அதே நாள் இரவு, ஆட்டோவில் சென்ற கும்பல் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துச்சென்றது. இரு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருநாவலூர் போலீசார் சிசிடிவி காட்சி ஆதாரங்களை கைபற்றி விசாரணையை தொடங்கினர்.

  Read More : பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடையை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்.. சமூக வலைதளத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ..!

  மேலும் ஆட்டோவின் பதிவு எண் மற்றும் செல்போன் எண் ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுப்பட்ட கும்பலை போலீசார் அடையாளம் கண்டனர். தாக்குதலில் ஈடுப்பட்ட கும்பல் சென்னை அருகே தனியார் விடுதியில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. சென்னை விரைந்த தனிப்படை போலீசார் பதூங்கியிருந்த ஐந்துபேர் கொண்ட கும்பலை பிடித்தனர்.

  விசாரணையில் பிடிப்பட்டவர்கள் சென்னையை சேர்ந்த ஹரிகரசுதன், முரளிகிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், தைரியநாதன் மற்றும் ஒரு சிறுவன் என்றும் தெரிந்தது. உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்தவர்கள் மது போதையில் வழிப்பறியில் ஈடுப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

  பிடிபட்டவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைபற்றிய போலீசார் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Kallakurichi