Home /News /kallakurichi /

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு... வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு... வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜாமீன் வழங்க மறுப்பு

ஜாமீன் வழங்க மறுப்பு

Kallakurichi : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி கடந்த 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் எழுப்பி இருந்த நிலையில் மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேரையும் கடந்த 17ம் தேதி போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து, அவர்கள் 5 பேரையும் கடந்த 27ஆம் தேதி பிற்பகலில் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார்  12 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் மீண்டும் ஐந்து பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி 28ஆம் தேதியான நேற்றைய தினம் அதிகாலை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி விழுப்புரத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைப்பெற்றது. அப்போது சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆரை கொண்டு ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் சென்று விட்டதால் சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரை கொண்டு ஜாமின் மனுவை தாக்கல் செய்ய பள்ளி தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

    Must Read : சதுரகிரி மலைக்குச் சென்ற 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

    அப்போது எப்.ஐ.ஆர். விவரங்களை சிபிசிஐடி போலீசார் தங்களுக்கு வழங்க மறுப்பதாக பள்ளி தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். இதனையடுத்து மாணவி மரணம் தொடர்பான வழக்கு விவரங்களை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.

    செய்தியாளர் - ஆ.குணாநிதி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Death, Kallakurichi, School student

    அடுத்த செய்தி