Home /News /kallakurichi /

கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை ஒரு நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை ஒரு நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை

ஒரு நாள் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீஸ்

ஒரு நாள் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீஸ்

Kallakurichi : கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் எழுப்பி இருந்த நிலையில் மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேரையும் கடந்த 17ஆம் தேதி போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையை கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலிசார், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

    பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் கேட்டுள்ளனர். இம்மனு மீதான விசாரணை இன்று விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனைத்தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்த மனு மீது நீதிபதி புஷ்பராணி விசாரணை நடத்தினார். இதனையடுத்து பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரை ஒரு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

    நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு


    அதன்படி, இன்று பிற்பகல் 12.30 மணி முதல் நாளை பிற்பகல் 12.30 மணி வரை 24 மணி நேர விசாரணை நடத்திய பிறகு 5 பேரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் விசாரணையை தொடங்குவதற்கு முன்பாக 5 பேருக்கும் மருத்துவமனை பரிசோதனை செய்யவும் நீதிபதி திருமதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

    Must Read : பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிகள் முடியைப் பிடித்துக்கொண்டு சண்டை - பாளையங்கோட்டையில் பரபரப்பு

    இதனையடுத்து போலீஸ் வாகனத்தில் 5 பேரும் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகு, விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் அழைத்து செல்லப்பட்டு, அங்கு வைத்து 5 பேரிடமும் தனித்தனியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் - ஆ.குணாநிதி.
    Published by:Suresh V
    First published:

    Tags: CBCID Police, Death, Kallakurichi, School student

    அடுத்த செய்தி