ஹோம் /நியூஸ் /கள்ளக்குறிச்சி /

50 மீட்டர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சோகம்!

50 மீட்டர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சோகம்!

விபத்தில் மரத்தில் தொங்கிய கார்

விபத்தில் மரத்தில் தொங்கிய கார்

Kallakkurichi | உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகில் தடுப்பு கட்டையில் கார் மோதி விபத்துக்குள்ளானது. அதில் அப்போது கார் தலைகீழாக 25 அடி பள்ளத்தில் உருண்டோடி கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர்.  தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kallakkurichi (Kallakurichi), India

  சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏஜாஸ். தனியார் நிறுவன ஊழியரான ஏஜாசின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தையை பார்ப்பதற்காக தனது தாய், தங்கை, மகள் மற்றும் நசீம் என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்று விட்டு நேற்று திரும்பியுள்ளனர். 

  நள்ளிரவில் தங்களது காரில் சேலத்தில் இருந்து புறப்பட்டு உளுந்தூர்பேட்டை வழியாக சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது செல்லும் வழியில் அதிகாலை 3 மணி அளவில் ஏஜாஸ் ஓட்டி வந்த கார் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில்  ரயில்வே மேம்பாலம் அருகே வந்துக்கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் சுமார் 50 மீட்டர் உருண்டோடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஏஜாசின் தாய், தங்கை மற்றும் மகள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ஏஜாஸ் மற்றும் நசீம் இருவரும் படுகாயம் அடைந்ததுள்ளனர்.

  ஜெசிபி மூலம் விபத்தான காரை எடுக்கும் மீட்பு படையினர்

  விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற உளுந்தூர்பேட்டை  போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  Also see... துரத்திய தெருநாய்க் கூட்டம்.. நொடியில் தப்பிய சிறுவர்கள்!

  மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனை செய்வதற்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை நேரத்தில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிர் இழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி         

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Car, Kallakurichi, Road accident