ஹோம் /நியூஸ் /கள்ளக்குறிச்சி /

இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுனர் - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுனர் - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

Kallakurichi | திருக்கோவிலூரில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுனர் கைது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். சந்தைப்பேட்டை தனியார் மருத்துவமனை அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வட்டம் மதுராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் விஜயகுமார் (23) ஆட்டோ ஒட்டி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இவரது ஆட்டோவில் அந்தப்பெண் செவிலியர் ஏறியுள்ளார். சந்தப்பேட்டை தனியார் மருத்துவமனையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் சங்கராபுரம் சாலையில் ஆட்டோவை திருப்பி அதிவேகமாக ஓட்டிச் சென்ற விஜயகுமார் இருட்டான பகுதிக்கு சென்று அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்,

அந்தப் பெண் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்தி சத்தம் போட்டு உள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடிய அந்தப் பெண் தனது தாய்க்கு தகவல் தெரிவித்த உடன் உறவினர்கள் அந்த பெண்ணை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அப்பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் தலைமறைவாக இருந்த விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணை ஆட்டோ டிரைவரே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : எஸ்.செந்தில்குமார்-கள்ளக்குறிச்சி

First published:

Tags: Crime News, Kallakurichi, Local News, Tamil News