ஹோம் /நியூஸ் /கள்ளக்குறிச்சி /

30 நிமிடத்தில் ரூ.56,000 கொள்ளை... ஏடிஎம்மில் ஏமாந்த பெண் - இளைஞரை தேடும் போலீஸ்

30 நிமிடத்தில் ரூ.56,000 கொள்ளை... ஏடிஎம்மில் ஏமாந்த பெண் - இளைஞரை தேடும் போலீஸ்

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

Kallakurichi News : ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் நூதன முறையில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு 30 நிமிடங்களிலேயே ரூ.56 ஆயிரத்தை கொள்ளையடித்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kallakkurichi (Kallakurichi), India

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் நேற்று உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.

  பணம் எடுக்க வழிமுறைகள் தெரியாததால் அங்கு வந்த இளைஞர் ஒருவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார். அந்த இளைஞர் ஏடிஎம் கார்டை அந்த இயந்திரத்தில் போட்டார். பின்பு ரகசிய குறியீட்டு எண்ணை கலைச்செல்வியிடம் கேட்டறிந்தார்.

  பின்பு அதை தவறாக பதிவிட்டு பணம் ஏதும் இல்லை என்று கூறி அந்த ஏடிஎம் கார்டுகளுக்கு பதிலாக போலியான ஏடிஎம் கார்டை கலைச்செல்வி இடம் கொடுத்து விட்டு அங்கிருந்து வேக வேகமாக கிளம்பி விட்டார். பணம் இல்லை என்று கலைச்செல்வி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து அவர் சொந்த ஊருக்கு பேருந்து மூலம்  சென்று உள்ளார்.

  இதையும் படிங்க : நாட்டு வெடிகுண்டு வீசி ஊராட்சிமன்ற தலைவரை கொன்ற கொடூரம்.. சிசிடிவி காட்சியில் அம்பலமான உண்மை!

  அப்போது சிறிது நேரத்திலேயே அவர் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் ரூ.56,000 பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் பதிவிட்டுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதன்படி போலீசார் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு எடுத்துச் சென்ற இளைஞர் எந்தெந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்து இருக்கிறார் என்பதை ஆய்வு செய்தபோது மங்கலம்பேட்டையில் உள்ள ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

  இதனையடுத்து உளுந்தூர்பேட்டையில் ஏடிஎம்மில்  பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். உளுந்தூர்பேட்டையில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு 30 நிமிடங்களில் ரூ.50,000 நூதன முறையில் கொள்ளையடித்த இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  செய்தியாளர் :  செந்தில்குமார் - கள்ளக்குறிச்சி

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Kallakurichi