முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் உயிரிழப்பு - தியாகதுருகத்தில் உறவினர்கள் சாலை மறியல்

தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் உயிரிழப்பு - தியாகதுருகத்தில் உறவினர்கள் சாலை மறியல்

சாலையில் படுத்து போராடிய கணவன்

சாலையில் படுத்து போராடிய கணவன்

Kallakurichi district News : கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில், தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

தியாகதுருகம் அருகே உள்ள கூவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மாசி இவர் மனைவி பெரியநாயகம்.  இந்த தம்பதிக்கு வேணுகோபால், ஐயப்பன் என்ற இரண்டு மகன்களும், மஞ்சமாதா என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் பெரியநாயகம் கருத்தரித்ததால் அதனை கலைக்க செய்வதற்காக தியாகதுருகம்  தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு கரு கலைப்பு செய்யப்பட்டதாகவும் இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி பெரியநாயகம் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

பெரிய நாயகத்தின் இறப்பில் சந்தேகம்  இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் நள்ளிரவில் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி கூடுதல் எஸ்.பி ஜவஹர்லால் தலைமையில் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உறவினர்களுடன் பேச்சுவார்த்தை

இது குறித்து பெரியநாயகத்தின் உறவினர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாலை மறிமலை கைவிட்டு அவர்கள் கலைத்து சென்றனர். தொடர்ந்து பெரியநாயகியின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Must Read : அரக்கோணம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு வந்த பெண் உயிரிழந்த சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - எஸ்.செந்தில்குமார்.

First published:

Tags: Abortion, Death, Kallakurichi