Home /News /kallakurichi /

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் புதிய திருப்பம்... கணித ஆசிரியர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றச்சாட்டு...

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் புதிய திருப்பம்... கணித ஆசிரியர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றச்சாட்டு...

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

Kallakkurichi | சிறையில் உள்ள கணித ஆசிரியர் கிருத்திகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் அவரை வேறு சிறைக்கு மாற்ற கோரியும் ஆசிரியர் கிருத்திகாவின் தந்தை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India
    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 13ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் எழுப்பி இருந்த நிலையில் மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், கணித ஆசிரியர் கிருத்திகா, வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேரையும் கடந்த 17ம் தேதி போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேரும் கடந்த 28ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்ற போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணித ஆசிரியர் கிருத்திகாவின் தந்தை ஜெயராஜ் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பள்ளி தாளாளர், செயலாளர் ஆகியோருடன் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகளான, தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்த கிருத்திகாவிற்கு சிறையிலேயே பள்ளி நிர்வாகிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகள் கிருத்திகாவை திருச்சி சிறைக்கு மாற்ற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

    Also see... உதகையில் சிறுத்தை தாக்கி 4 வயது பெண் குழந்தை உயிரிழப்பு... கிராம மக்கள் சோகம்

    தந்தை ஜெயராஜின் மனுவை ஏற்றுக் கொண்ட விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி திருமதி.சாந்தி, மனுவின் மீதான விசாரணையை பிறகு மேற்கொள்வதாக தெரிவித்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அவரது தந்தை மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Dead, Kallakurichi, School student

    அடுத்த செய்தி