ஹோம் /நியூஸ் /கள்ளக்குறிச்சி /

உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது..!

உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது..!

கஞ்சா விற்ற 9 பேர் கைது

கஞ்சா விற்ற 9 பேர் கைது

உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா விற்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதை அடுத்து தனிப்பட போலீசார் உளுந்தூர்பேட்டை பகுதியில் சோதனை செய்தனர். அதில் பொறியியல் பட்டதாரி உட்பட 9 பேரை கைது செய்து அவர்கள் இடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kalladaikurichi, India

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் கடந்த வாரம் செய்தி பரவியது. அதை அடுத்து உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமை தனிப்படை அமைத்து அப்பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பொறியியல் பட்டதாரிகள் உட்பட 9 பேர் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

  நகரப் பகுதியில் இளைஞர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதில் முக்கிய குற்றவாளியான ரமேஷ் என்பவரை ஏற்கனவே  உளுந்தூர்பேட்டை உதவி ஆய்வாளர் கைது செய்து பணம் பெற்றுக் கொண்டு விடுவித்துள்ளார்.

  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

  Also see... ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ் : அறிமுகமான புதிய வசதி!

  இதனை அறிந்த அதிகாரிகள் அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தனர். தற்போது அந்த முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Cannabis, Kallakurichi