ஹோம் /நியூஸ் /கள்ளக்குறிச்சி /

'ஒருகட்டு பணம்'.. சாலையில் கிடந்த ரூ.89,000... காவல்துறையிடம் ஒப்படைத்த கூலித்தொழிலாளிகள்..!

'ஒருகட்டு பணம்'.. சாலையில் கிடந்த ரூ.89,000... காவல்துறையிடம் ஒப்படைத்த கூலித்தொழிலாளிகள்..!

நேர்மையான கூலித்தொழிலாளிகள்

நேர்மையான கூலித்தொழிலாளிகள்

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த 89 ,000 ரூபாய் பணத்தை எடுத்த கூலித்தொழிலாளிகள் காவல் நிலையத்தில் கொண்டுவந்து ஒப்படைத்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kallakkurichi (Kallakurichi), India

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மழவராயனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வேலாயுதம் மற்றும் அவரது உறவினர் காட்டுநெமிலி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சியில் இருந்து  உளுந்தூர்பேட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர்.

  அப்போது திம்மலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பை ஒன்று கிடந்ததை பார்த்து அவர்கள் அதனை எடுத்து பிரித்துக் கூட பார்க்காமல் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  அதனை பிரித்துப் பார்த்த போலீசார் அதில் ரூபாய் 89,000 பணம் இருந்தது தெரியவந்தது. பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்ட போலீசார் பணத்தை தவற விட்டது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Also see...'கிடைத்த கேப்பில் விபரீதம்' ரயில் பெட்டிக்கு இடையே இளைஞர்கள் பயணம்..

  இந்நிலையில் சாலையில் கிடந்த 89 ,000 ரூபாய் பணத்தை கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலி தொழிலாளர்களுக்கு அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

  செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kallakurichi, Money