Home /News /kallakurichi /

கள்ளக்குறிச்சி கலவரம் : போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்த நபர்கள் கைது

கள்ளக்குறிச்சி கலவரம் : போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்த நபர்கள் கைது

கள்ளக்குறிச்சி கலவரம்

கள்ளக்குறிச்சி கலவரம்

Kallakurichi, :சிசிடிவி காட்சிகள் மற்றும் கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு  4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது போலீஸ் வாகனத்திற்கு  தீ வைத்தவர்  மற்றும் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர்  தனியார் பள்ளியில் மாணவி  மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில்  நீதி கேட்டு கடந்த 17-ம் தேதி அங்கு போராட்டம் நடந்தது. இந்த போராட்டமானது கலவரத்தில் முடிந்தது. கலவரத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதுடன் போலீஸ் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான பேருந்து,  கார், டிராக்டர் மற்றும்  பள்ளியில் பயிலும் மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களையும் கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தினர்.

    இதுதொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை கொண்டு கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி சொத்துகளை உடைத்து சேதப்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏர்வாய்பட்டினம் கிராமத்தை சேர்ந்த  சந்தோஷ்‌ , சங்கராபுரம் அருகே பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த‌ நவீன்குமார்‌ , மேலும்  போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்திய கா.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த  மணிவர்மா மற்றும்  போலீசார் மீது கற்கள் வீசி தாக்கிய பின்னல்வாடி கிராமத்தை சேர்ந்த முருகன் ‌ஆகிய நான்கு பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    Also Read: மைதானத்தில் விளையாடுங்கள் செல்போன் வேண்டாம் - மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ்

    சிசிடிவி காட்சிகள் மற்றும் கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு  நால்வரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்பு ஆஜர்படுத்தினர் . இதனையடுத்து குற்றவாளிகள் நான்கு பேரையும் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை கடலூர் சிறையில் அடைக்க நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார்.

    செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: CCTV, Crime News, Kallakurichi, School student, Tamil News

    அடுத்த செய்தி