முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / பிளஸ் டு மாணவி மரணத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பிருந்தால் கடும் நடவடிக்கை- மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தகவல்

பிளஸ் டு மாணவி மரணத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பிருந்தால் கடும் நடவடிக்கை- மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தகவல்

மாணவி மரணம்

மாணவி மரணம்

Kallakurichi +2 Girl Death: மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மரண விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பு இருப்பது உறுதியானால் , மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஸ்ரீமதி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியின் மரண விவகாரம் தொடர்பாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரக வட்டாரங்கள் கூறும்போது, தற்போது போலீஸ் விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது என்றும், போலீசாருடன் இணைந்து மாவட்டத்திலுள்ள கல்வி அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளி விடுதியில் ப்ளஸ் டூ மாணவி மர்ம மரணம்.. நியாயம் கேட்டு தாய் கண்ணீர்.. நடந்தது என்ன?

மேலும், விசாரணையின் முடிவில் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தால், துறை ரீதியாக மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது , அங்கு படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்வது என அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

First published:

Tags: Girl dead, Kallakurichi, Mysterious death