பாடம்-3 - உறவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கப் பழகுவோம்

பாடம்-3 - உறவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கப் பழகுவோம்
  • Share this:
நம் வாழ்க்கையை தாங்கி நிற்கும் வேர்களாகவும், நம் வாழ்க்கைக்கான ஆதாரமாகவும் விளங்குவன நம் உறவுகள். உறவுகள் எல்லாவற்றையும் விட நம் வாழ்க்கைக்கு ஒரு முக்கியமானதைக் கொடுக்கின்றன - வாழ்க்கைக்கான அர்த்தம். இந்த உறவானது நம் பெற்றோர், வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளுடனோ; அருகிலுள்ளவர்களுள் முக்கியமாவனர்களுடனோ; சமூகத்துடன் நட்பானவர்களுடனோ; நம்மைச் சுற்றியுள்ள பிற அடையாள அடிப்படையிலான குழுக்கள் மற்றும் நம் தொழில்முறை குழுக்களுடனோ அமையப்பெறுகிறது.

இக்காலத்தில், உறவுகள் சிதைந்தும் சேதமடைந்தும்  இருக்கின்றன என்பது ஒரு உண்மை. காரணங்களை ஆராயாமல் அதை சரிசெய்ய முயற்சிப்பது பயனற்றது. நம்பக்கூடிய சில வழக்குகளை எனது காவல்துறை வாழ்க்கையில் நான் பார்த்திருக்கிறேன். நம்பமுடியாத சிலவும் உண்டு - திருமணமான உடனேயே சண்டையிட்டு, என் அலுவலகத்திற்கு வந்து ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டும் ஒரு ஜோடி, திருமணமான ஏழு நாட்களிலேயே  உறவு சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ஒரு ஜோடி, அதே நேரத்தில் திருமணமாகி  ஐம்பது ஆண்டுகள் கழித்து தன் கணவர் இன்னும் தான் நினைத்தபடியேதான்  வாழ்ந்து கொண்டிருக்கிறார் என புகார் கூற வந்திருக்கும் ஒருவரின் மனைவி என பலதரப்பட்ட மக்களை நான் என் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன். வானவில் தோற்று போகும் அளவிற்கு வண்ணங்கள்!

இன்று நம் வாழ்வின் மையப்புள்ளியும், நிகரற்றதுமான  ஒரு  உறவைப் பற்றி பேச விரும்புகிறேன்.


திருமணம் :

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும், பூமியில்தான் வாழ்ந்ததாக இருக்க வேண்டும். நடைமுறைக்குரிய வகையில் வாழ வேண்டும். அதனால்தான் பல திருமணங்கள் தோல்வியுறுவதை நாம் காண்கிறோம்; அடிதளத்தில் கடுமையான விரிசல்களைப் பெற்று, சரியான நேரத்தில் சரிவுக்காகக் காத்திருக்கும் சில திருமணங்கள், சில கத்தியின் விளிம்பில் உள்ளன. அது ஏன்? நூற்றுக்கணக்கான தம்பதிகளுடனான எனது கலந்துரையாடலின்போது நான் காணக்கூடிய ஒரு காரணம், நம்மிடம் உருவான நம்பிக்கையற்ற தன்மை. நாம்  பல நூற்றாண்டுக்கு முன் இருந்த அதே நபர் அல்ல. வேகத்துடன் செயல்படும் கூடிய இச்சமூகம் நம்மில் பெரும்பாலோரை பொறுமையில்லாத, கோரிக்கைகளை மட்டுமே உடையவராக, சுயநலமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட மனிதர்களாக மாற்றியுள்ளது . துரதிர்ஷ்டவசமாக, நாம்  அதை உணரவில்லை, மிக முக்கியமாக அதை மறுக்கிறோம். நீங்கள் ஒரு தம்பதியுடன் பேசும்போது, ​​அவர்களது உறவுகளில் சற்று உற்று நோக்கும்போது, ​​ஒரு சிறிய காரணத்தினால் பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டு காலப்போக்கில் பெருஞ்சிக்கலாகிவிட்டது என்பதை  உணர்வீர்கள்.

சிலவற்றில், குளியலறையில் வைத்த ஒருவரது பற்குச்சி மற்றவருடையதை இடித்துக்கொண்டதனால், சுத்தமாக இருப்பது பற்றி  (தன் சுயதரத்தின்படி) ஒருவர் மற்றவரிடமிருந்து எதிர்பார்ப்பதாலும், ஒருவரின் மனைவி (பொதுவாக இந்திய சூழலில்) சற்று அடிபணிந்தவராக இருக்கவேண்டும், உரையாடலின் போது எதிர்த்து வாதிடக்கூடாது போன்ற எதிர்பார்ப்புகளாலும் பிரச்சினைகள் வருவது உண்டு .நமக்கு நாம் உண்மையாக இருத்தலே நம்பகத்தன்மை என்பது. எல்லா ‘உற்பத்தி குறைபாடுகளுடன்’ தன்னை ஏற்றுக்கொள்வதும், அதே நேரத்தில் அந்த இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பதும் மிக முக்கியம். கணவனும் மனைவியும் தங்களுக்குத் திருமணமாகி ஏழு நாட்களிலோ அல்லது ஏழு ஆண்டுகளிலோ ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வார்கள் என்று நாம் எவ்வாறு எதிர்பார்க்கலாம் - அவர்கள் தங்கள் திருமணத்தை உணர்வுபூர்வமாக அணுகாவிட்டால்? அவர்கள் அடிப்படையில் தனக்கென்று ஒரு மனநிலையும், நம்பகத்தன்மையின் அடிப்படையிலான பண்புகளைக் கொண்ட இரண்டு வெவ்வேறு நபர்கள்.

நாம் வாடிக்கையாளர்களுடன் அவர்களின் வணிக நடைமுறையைச் சரிசெய்யும்போது அவர்களுடன் தொலைபேசியில் பணிவுடன் பேச முடிகிற பொழுது, நம் வாழ்வின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபரான நம் வாழ்க்கை துணையுடன் அதே போன்று உரையாடலைக் கொள்ள முடியாதது ஏன்? ஒரு செடி நன்றாக வளர, அதை தினமும் வளர்க்க வேண்டும். அதற்கு அதன் நேரத்தை கொடுக்க வேண்டும், களை எடுத்து, உரம் சேர்த்து, வளம் கூட்டி, வளர வைக்க  வேண்டும் - அப்பொழுதுதான் அது ஒரு வலிமையான மரமாக வளரக்கூடும். திறந்த மனதுடனும், நம்பகத்தன்மையுடனும் நேர்மையான உரையாடல்களை கொள்வதே 21ஆம் நூற்றாண்டின்  திருமணங்கள் உயிர்வாழ்வதற்கான உறுதியான வழி என்று நான் நம்புகிறேன். கணவன்-மனைவி இருவரும் கெளரவமான மற்றும் நல்ல அர்த்தமுள்ள தலைவன் -தலைவியென செயல்பட்டால், தங்கள் அன்றாட வாழ்க்கையில் வரும் விரிசல்களை இனம் காணும்போது, ​​அதைப் பற்றி வெளிப்படையாகக் பேசத்துணிகின்ற போது, ​​உறவை மேம்படுத்த இயலும் .

மேலும், நம் தொழில்கள் நம் நேரத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்வதோடு, நம் தனிப்பட்ட வாழ்க்கையில் தெளிவாக ஊடுருவி வருவதால், நம் வாழ்க்கைத் துணைக்கு மிகக் குறைவான நேரம் மட்டுமே உள்ளது. வீட்டில் தூங்கும் நேரத்தை நாம் கழித்தால், நம் வாழ்க்கைத் துணையுடன் திறம்பட செலவிட்ட நேரத்தை நாமே கணக்கிடலாம். எதற்காக நாம் இந்நேரத்தை அதிகமாக தியாகம் செய்கிறோம்? நம் அலுவலகம் செல்லும் கடைசி நாளில், நம் சகாக்களிடமிருந்து ஒரு நல்ல கடிகாரத்தைப் பெற்று, நாம் நன்றாக வேலை செய்தோம், மற்றவரை விட நேரம் காலம் பாராமல் உழைத்தோம் என்பதை கேட்கவா? அல்லது ஒவ்வொரு நாளும் அதே நல்ல கடிகாரத்தை அணிந்து கொண்டு, ஆனால் அது காண்பிக்கும் நேரத்தை நம் வாழ்க்கைத் துணையுடன் செலவிட முடியாமல் இருக்கவா? நாம் அலுவலகத்திற்குச் செல்லாததால், அதன் செயல்பாடுகள் நிற்கப்போவது இல்லை, மேலும் நாம் இல்லாததால் திறமையாக இயங்கக்கூடும்! பெரியோர் சொன்னது போல, பரபரப்பாக இயங்கும் மனிதன் எப்போதும் தனக்கென நேரத்தைக் கண்டுபிடிப்பான், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருக்க அந்த நேரத்தைக் கண்டுபிடியுங்கள்!

நாம் திருமணமானவுடன், தெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்வில் உள்ள மற்ற அத்தியாவசிய உறவுகளிலிருந்து விலகிவிடுகிறோம் என்பதையும் பலமுறை கவனிக்கிறோம். நம் அத்தைகளின் வீட்டிற்கு நாம் செல்வது, மெதுவாக குறைந்து, அது பூஜ்யமாகி விடுவதை உணர்வதில்லை. நம் மாமன்மகனையோ, பெரியப்பா மகளையோ, பழைய நண்பர்களையோ வீட்டிற்கு சென்று கண்டது எப்பொழுது என்ற கேள்வி பிறக்கிறது! ‘சொந்தபந்தங்கள் ’ என்று அழைக்கப்படும் மற்ற அனைத்தையும் தியாகம் செய்வதன் மூலம் திருமணங்களை நம் வாழ்வின் மையத்தில் வைக்க முயற்சித்தாலும், ஆரோக்கியமான சொந்தபந்தங்களே திருமணத்தை சிறந்ததாக மாற்றும் என்பதை மிகத் தெளிவாகக் கண்டேன். இது முக்கிய உறவுகளின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, அவர்களின் இழப்பின் போது அவர்களுடன் நிற்பது, அவர்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது மற்றும் முக்கியமாக அவர்களுடன் நேரத்தை செலவிடுவது நம் வாழ்விற்கும் அதன் மூலம் நம் திருமணங்களுக்கும் அர்த்தம் தருகிறது. இந்த அழகிய அமைப்பு துண்டிக்கப்பட்டு, நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் நாம் கவனக்குறைவாக இருந்தால், இந்த போலித்தனம் உடைவதெப்படி?

​​இந்த 21 நாட்கள் பெரியவர்களாகிய நாம் உண்மையிலேயே முக்கியமான ஒரு உறவில் கவனம் செலுத்துவதற்கான சிறந்த நேரம் என நான் நிச்சயமாக நம்புகிறேன். நம் வாழ்க்கை துணை. மேலும், இந்த முக்கியமான உறவை நாமே மறுசீரமைப்பதன் மூலம், நம் காவல்துறை மற்றும் நீதிமன்றங்களுக்கு அதிக சுமைகளை ஏற்படுத்த வேண்டாம் - அவர்கள் தங்கள் முக்கிய வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தட்டும் .

எழுத்தாளர் டேவ் மியூரர் சொன்ன உன்னத வாக்கியத்தின்படி ,

“ஒரு சிறந்த திருமணம் என்பது‘ சரியான ஜோடி ’ஒன்றாக வரும்போது நடப்பது அல்ல. ஒரு முழுமையற்ற தம்பதியினர் தங்கள் வேறுபாடுகளை சேர்ந்துணர்ந்து அனுபவிக்க கற்றுக்கொள்ளும்போதுதான் நடக்கிறது ”

வாழ்க்கையை முழுமையாக்குவதற்கு நம் முழுமையற்ற தன்மையை அனுபவிப்போம்!

Also see:
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories