ரசிகர்கள் இல்லா களத்தில் ஐ.பி.எல் தொடர்...? ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அமீரகத்திற்குப் போன பின்னணி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடப்பாண்டு செப்டம்பர் 19 ம் தேதி முதல் நவம்பர் 8 ம் தேதி வரை துபாய், ஜார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜீஷ் படேல் அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் இல்லா களத்தில் ஐ.பி.எல் தொடர்...? ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அமீரகத்திற்குப் போன பின்னணி
ஐபிஎல் கோப்பை
  • Share this:
கொரோனோ பரவல் காரணமாக மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனோ பரவல் வீரியம் எடுக்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. நான்கு மாதங்களுக்கு பிறகு கொரோனோவை கட்டுக்குள் கொண்டுவந்த இங்கிலாந்து போட்டியை நடத்தி வெற்றியும் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த பிசிசிஐ தீவிரம் காட்டியது.

ஐ.பி.எல். போட்டியை நடத்த உலகக் கோப்பை, ஆசிய கோப்பை தொடர்கள் தடையாக இருந்தன. அக்டோபரில் தொடங்கவிருந்த டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துவது தொடர்பான முடிவு எடுக்க ஐ.சி.சி காலம் தாழ்த்தி வந்தது.


இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு உலகக் கோப்பை டி20 தொடரை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்தது.இதனை அடுத்து, பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஐ.பி.எல் தொடரை செப்டம்பர் 19 முதல் நவம்பர் 9 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. துபாய், ஜார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும் எனவும் ஐ.பி.எல் குழு தலைவர் பிரிஜீஷ் படேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறப்போகிறது என்ற செய்தி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும், அதனை நேரில் காணமுடியாது என்ற செய்தி வருத்தமளிப்பதாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.

Also see... ப்ளாக் பிகினியில் இலியானா... இணையத்தை கலக்கும் போட்டோஸ்!கொரோனா அச்சத்தால் ரசிகர்கள் இல்லாமல், ஐபிஎல் போட்டியை நடத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வீரர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தையும், நலனையும் கருத்தில் கொண்டு ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் என்றாலே ரசிகர்கள் தான் என்ற நிலை மாறி, மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

களத்தில் வீரர்கள் பொழியும் ரன் மழைக்கும், விக்கெட் வேட்டைக்கும் ரசிகர்களின் உற்சாக குரல் வீரர்களை உற்சாகத்தை கொடுத்து வந்த நிலையில், இந்த முறை வீரர்களும் ரசிகர்களின் ஆரவாரமின்றி களமாட காத்திருக்கின்றனர். இன்னும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
படிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்

படிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்

படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு
கொரோனோ தாக்கம் குறையும் பட்சத்தில் ரசிகர்களுக்கு அனுமதிக்க வாய்ப்புள்ளது. ஐ.பி.எல் வரலாற்றில் மூன்றாவது முறையாக இந்தியாவிற்கு வெளியில் போட்டிகள் நடைபெறுகின்றன.

2009 மற்றும் 2014  ஆகிய ஆண்டுகளில்  பொதுத்தேர்தல் காரணமாக பாதுகாப்பு காரணம் கருதி தென் ஆப்ரிக்கா மற்றும் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. தற்பொழுது கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading