கொரோனாவை விட ஜிம்பாப்வே மக்களுக்கு மிகப்பெரிய கவலை இதுதான்...!

பசி மற்றும் தண்ணீர் பஞ்சத்தால் மடிவதை விட கொரோனா பெரிய அச்சமாகத் தெரியவில்லை என்கிறார்கள் மக்கள்.

கொரோனாவை விட ஜிம்பாப்வே மக்களுக்கு மிகப்பெரிய கவலை இதுதான்...!
தண்ணீருக்காக காத்திருக்கும் மக்கள் (Image: CNN)
  • News18
  • Last Updated: May 16, 2020, 1:42 PM IST
  • Share this:
ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் ஜிம்பாப்வே மக்களுக்கு அதை விட பெரிய கவலை ஒன்று இருக்கிறது

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் தான் ஜிம்பாப்வேயில் ஒரு வாளித் தண்ணீருக்காக மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா இந்த நாட்டையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் மக்களுக்கு அதைவிட பெரிய பெரிய பயத்தை தந்திருக்கிறது தண்ணீர் பஞ்சம், நாள் ஒன்றுக்கு ரேஷன் முறையில் வெறும் 40 லிட்டர் தண்ணீர்தான் அதாவது நம் ஊரில் உள்ள 2 குடம் அளவுக்குதான் தரப்படுகிறது. அதனால்தான் Chitungwiza நகரத்தில் இறந்துபோன உறவினரைக் கூட விட்டுவிட்டு பலரும் தண்ணீர் பிடிக்க ஓடி வருகிறார்கள்.

கொரோனா வராமல் இருக்க தனிமனித இடைவெளி அவசியம் என்ற அரசின் அறிவுரை எல்லாம், தண்ணீர் காலியாகிவிடுமோ என்ற அச்சத்தில் காணாமல் போய் விடுகிறது. அடிகுழாய்கள் முன் வரிசை கட்டி நிற்கின்றன பிளாஸ்டிக் தண்ணீர் குடுவைகள்.


ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா பரவலால் 3 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தாலும், பசி மற்றும் தண்ணீர் பஞ்சத்தால் மடிவதை விட கொரோனா பெரிய அச்சமாகத் தெரியவில்லை என்கிறார்கள் மக்கள்.


First published: May 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading