ராணுவம் மூலம் பதவியில் இருந்து தூக்கப்பட்ட ஜிம்பாவே முன்னாள் அதிபர் காலமானார்!

ராணுவம் மூலம் பதவியில் இருந்து தூக்கப்பட்ட ஜிம்பாவே முன்னாள் அதிபர் காலமானார்!
ராபர்ட் முகாபே (Reuters)
  • News18
  • Last Updated: September 6, 2019, 12:08 PM IST
  • Share this:
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபராக இருந்து ராணுவம் மூலம் பதவியிறக்கப்பட்ட ராபர்ட் முகாபே, சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார்.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ராபர்ட் முகாபே. சர்வாதிகார போக்குடன் செயல்பட்ட அவர், 2017-ம் ஆண்டு தனது இரண்டாவது மனைவியை துணை அதிபராக நியமிக்க நடவடிக்கை எடுத்துவந்த நிலையில், நவம்பர் மாதம் ராணுவம் தலைநகரை சுற்றி வளைத்தது.

அதிரடி நடவடிக்கையின் மூலம் ராணுவம் ஆட்சியை பறித்தது. முகாபே சிறைவைக்கப்பட்டார். இதனை அடுத்து, ஆளும்கட்சியும் முகாபேவை பதவி விலக வலியுறுத்தியது. வேறு வழி இல்லாததால் பதவி விலகினார். இதனை அடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. துணை அதிபராக இருந்த எம்மர்சன் நங்காக்வா அதிபராக பதவியேற்றார்.


ராணுவம் மூலம் முகாபேவை நங்காக்வா-வே பதவி விலகச்செய்துள்ளதாக கூறப்பட்டது. இதனை அடுத்து முகாபே மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த முகாபே, இன்று காலை மரணமடைந்ததாக ஜிம்பாப்வே அரசு அறிவித்துள்ளது.

First published: September 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்