ஹோம் /நியூஸ் /உலகம் /

உலகின் மிக உயரமான நாய் இது தான் - கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது...

உலகின் மிக உயரமான நாய் இது தான் - கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது...

நன்றி: கின்னஸ்

நன்றி: கின்னஸ்

World tallest dog - மூன்றடி ஐந்து அங்குல உயரம் கொண்ட செல்லப் பிராணியை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வளர்க்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உலகின் பல்வேறு சாதனைகளை அறிவிக்கும் கின்னஸ் உலக சாதனை அமைப்பு உலகின் மிக உயரமான நாய் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகணத்தில் உள்ள பெட்போர்ட்டில் வசிக்கும் இரண்டு வயாதான கிரெட் டேன் ரக நாய் தான் உலகின் மிக உயரமான நாய் என கின்னஸ் அறிவித்துள்ளது. இதன் உரிமையாளரான பிரிட்டானி என்ற பெண் இதற்கு சியஸ் (Zeus) எனப் பெயரிட்டுள்ளார்.

இந்த சியஸ் நாயின் உயரம் 1.046 மீட்டர் அதாவது 3 அடி ஐந்து அங்குலமாகும். தனது செல்லப் பிராணிக்கு கிடைத்த மகுடத்தினால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ள உரிமையாளர் பிரிட்டானி. தனது சகோதரருடன் வேலைப் பார்க்கும் நபரிடம் இருந்து எட்டு மாத குழந்தையாக இந்த கிரேட் டேனை வாங்கியுள்ளார்.

முதலில் இவருக்கு இவ்வளவு பெரிய நாயை வீட்டில் வளர்ப்பதற்கு பயமாக இருந்ததாகவும், ஆனால் பார்த்தவுடன் அதன் மேல் பாசம் வந்து மிகவும் பிடித்து போனதால் மறுகணம் யோசிக்கமல் சியஸை வாங்கிவிட்டதாகவும் கூறினார். பொதுவாக வேட்டையடும் தன்மை கொண்டவை கிரேட் டேன் ரக நாய்கள். ஆனால், பிரிட்டானி வளர்க்கும் சியஸ்சோ கூலாக ரிலாக்சாகவே எப்போதும் இருக்குமாம். சியஸுடன் மூன்று சிறிய ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு நாய் குட்டிகளும்,  ஒரு பூனையும் வீட்டில் ஒற்றுமையுடன் வசிக்கிறார்கள்.

அமெரிக்காவின் டெல்லாஸ் நகரில் உள்ள சந்தைதான் சியஸ்சுக்கு பிடித்தமான இடமாம். அங்கு சியஸே பிரிட்டானி அடிக்கடி அழைத்து செல்லும் போது, பலரும் தனது செல்லப் பிராணியை ஆச்சரியத்துடன் பார்ப்பது தனக்கு ஆனந்தத்தை தரும் என்கிறார். குறிப்பாக, பார்ப்பவர்கள் எல்லாம் முதலில் லேசாக பயந்தாலும், பின்னர் இந்த குதிரையில் நாங்கள் சவாரி செய்யலாமா என ஜாலியாக கேட்பார்கள் என்கிறார் பிரிட்டானி.

இதையும் படிங்க: ஆணுறையில் ஓட்டை போட்ட காதலி.. வொர்க் அவுட் ஆகாத ப்ளான் - தண்டனை வாங்கி கொடுத்த காதலன்

400 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் இந்த கிரேட் டேன் ரக நாய்கள் முதலில் உருவாக்கப்பட்டதாக பிரிட்டானிக்க என்சைக்லோபீடியா தெரிவிக்கிறது. இதன் மிகப்பெரிய தாடையும், உடலும் கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. இது தைரியத்திற்கும், தோழமைக்கும், நம்பகத்தன்மைக்கும் பெயர் போன ரகமாகும்.

First published:

Tags: Dog, Guinness, Pet Animal