முகப்பு /செய்தி /உலகம் / புதினிடம் உஷாராக இருங்கள் அணு ஆயுத தாக்குதல் நடைபெறலாம் - உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

புதினிடம் உஷாராக இருங்கள் அணு ஆயுத தாக்குதல் நடைபெறலாம் - உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

ஜெலன்ஸ்கி

ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா போர் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

  • 1-MIN READ
  • Last Updated :

மனித உயிர்களை ஒரு பொருட்டாக கொள்ளாத ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டார் என உக்ரைன் அதிபர் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா போர் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. உக்ரைன் எல்லைக்கு தனது ராணுவ படைகளை அனுப்பி ரஷ்யா தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த செயல்பாடுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. போர் இரண்டு மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமர் புதினிடம் உலக நாடுகள் அனைத்து உஷாராக தயார் நிலையில் இருக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் விளாதிமோர் செலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் சிஎன்என் ஊடகத்திற்கு அவர் பிரத்தியேகப் பேட்டி அளித்துள்ளார். அதில் செலன்ஸ்கி, " உக்ரைன் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்து புதினிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த போரில் புதின் அணு ஆயுதம், கெமிக்கல் ஆயுதம் போன்றவற்றை பயன்படுத்தக் கூட தயங்க மாட்டார். இதை தகவல் என்ற கோணத்தில் பார்க்காமல் உண்மை என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். ஏன்னென்றால் அவர்கள் எதையும் செய்யக் கூடியவர்கள். மக்களின் உயிர்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருளே இல்லை" என கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் தங்களை நேட்டோ படையில் இணைக்க விருப்பம் தெரிவித்தன. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது போன்ற முடிவை இரு நாடுகளும் எடுத்தால், ஐரோப்பிய கண்டத்தில் அணு ஆயுதங்கள், ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை களமிறக்க நேரிடும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரும் அதிபர் புதினின் முக்கிய கரமாக பார்க்கப்படும் டிமிட்ரி மெட்னதேவ் எச்சரித்துள்ளார்.

Also read... உயரம் காரணமாக வேலையின்றி தவித்த எம்பிஏ பட்டதாரி - உதவிக்கரம் நீட்டி வேலை பெற உதவிய காங்கிரஸ் எம்எல்ஏ

இதை குறிப்பிட்டே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தயார் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய படைகளுக்கும் நேட்டோ படைகளுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. சோவித் ரஷ்யாவின் ஆதிக்கத்தை தடுக்கவே, 1949ஆம் ஆண்டு அமெரிக்கா மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து நேட்டோ படையை கட்டமைத்தது.

சோவித் ரஷ்யா உடைந்த நிலையில், அதிலிருந்து பிரிந்த சில நாடுகள் தங்களையும் நேட்டோ படைகளில் இணைத்துக் கொண்டன. சேவியத்தில் இருந்து வெளியேறிய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் அமெரிக்கவுடன் நெருக்கம் காட்டி, நேட்டோவில் இணையப் போவதாக கூறி வந்த நிலையில் அதை எதிர்த்து தான் ரஷ்யா தற்போது போர் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. இந்த சூழலில் பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளும் தற்போது நேட்டோவில் இணையப் போவதாக அறிவித்துள்ளன.

First published:

Tags: Russia - Ukraine