ஹோம் /நியூஸ் /உலகம் /

இயற்பியல் கேள்விக்கான பதிலை கண்டறிய ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த யூடியூபர்! விடை கிடைத்ததா?

இயற்பியல் கேள்விக்கான பதிலை கண்டறிய ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த யூடியூபர்! விடை கிடைத்ததா?

அமெரிக்க இயற்பியல் குழுவிற்கான 2014 தகுதி தேர்வின் குறிப்பிட்ட கேள்வியைப் படிப்பதன் மூலம் ஆராய்ச்சியைத் தொடங்குகிறார் முல்லர்.

அமெரிக்க இயற்பியல் குழுவிற்கான 2014 தகுதி தேர்வின் குறிப்பிட்ட கேள்வியைப் படிப்பதன் மூலம் ஆராய்ச்சியைத் தொடங்குகிறார் முல்லர்.

அமெரிக்க இயற்பியல் குழுவிற்கான 2014 தகுதி தேர்வின் குறிப்பிட்ட கேள்வியைப் படிப்பதன் மூலம் ஆராய்ச்சியைத் தொடங்குகிறார் முல்லர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கணிதம் மற்றும் இயற்பியல் தொடர்பான தேர்வுகளில் கார் அல்லது ரயில் போன்ற பல்வேறு போக்குவரத்து முறைகள் தொடர்பாக சில கடின கேள்விகள் இடம்பெறுவது சாதாரணமான விஷயம். ஆனால் இவற்றுக்கு உரிய பதில் கூறுவது மிகவும் கடினமாகவே இருக்கும். இதனிடையே 2014 US Physics Olympiad team தகுதி தேர்வில் கேட்கப்பட்ட ஒரு சிக்கலான கேள்விக்கான பதிலை கண்டறிய பிரபல யூடியூபர் ஒருவர் வித்தியாசமான முயற்சியில் இறங்கிய சம்பவம் உலகளவில் வைரலாகி இருக்கிறது.

Veritasium என்ற யூடியூப் சேனலை டெரெக் முல்லர் (Derek Muller) என்பவர் நடத்தி வருகிறார். இவருக்கு சுமார் 10.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்நிலையில் நாம் மேலே குறிப்பிட்டிருக்கும் தகுதி தேர்வில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரை தொடர்புப்படுத்தி கேட்கப்பட்ட ஒரு அனுமான சூழ்நிலைக்கான பதிலை கண்டறிய ஒரு ஹெலிகாப்டரையே வாடகைக்கு எடுத்து விட்டார் டெரெக் முல்லர். இது தொடர்பான வீடியோவை தனது சேனலிலும் அப்லோட் செய்து இருக்கிறார்.

அந்த வீடியோவில் முல்லர் அமெரிக்க இயற்பியல் குழுவிற்கான 2014 தகுதி தேர்வின் குறிப்பிட்ட கேள்வியைப் படிப்பதன் மூலம் தொடங்குகிறார். அதன்படி அதில் இடப்பெற்றிருக்கும் கேள்வி, "ஒரு ஹெலிகாப்டர் சீரான வேகத்தில் கிடைமட்டமாக பறந்து கொண்டிருக்கும் போது அதனடியில் ஒரு முழுமையான நெகிழ்வான சீரான கேபிள் தொங்கவிடப்பட்டுள்ளது.

' isDesktop="true" id="602565" youtubeid="q-_7y0WUnW4" category="international">

ஹெலிகாப்டர் கீழே காண்பது போல காற்றில் பறக்கும் போது அதன் கீழ் தொங்கும் கேபிளானது, கீழ்காணும் படத்தில் காட்டப்பட்டிருப்பது போல எந்த ஷேப்பில் இருக்கும்.?" என்பதே அது. மேலும் அந்த கேள்வியையும் வீடியோவில் தெளிவாக காட்டி இருக்கிறார் டெரெக் முல்லர். A,B,C,D,E என்று அதில் 5 ஆப்ஷன்கலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அனுமான அடிபடையிலான கேள்விக்கு பதிலை வழக்கமான முறையில் கண்டறிய முயற்சிக்காமல், நேரடியாக ஹெலிகாப்டரை வைத்தே கண்டறிய செயலில் இறங்கினார் முல்லர்.

Must Read | பல பயனர்களின் நீண்டநாள் காத்திருப்பு..! இன்ஸ்டாகிராமில் வந்துள்ள புதிய அப்டேட்!

இந்த சோதனைக்கு முன்னதாக தனது வியூவர்ஸிடம் இந்த 5-ல் எது சரியாக இருக்கும் என்று கேட்டார். பெரும்பாலானோர் ஆப்ஷன் C-யை கூறினார்கள். பின்னர் ஹெலிகாப்டரில் பறந்தபடி சோதனையை தொடங்கினார். கேள்வியில் உள்ளபடி குறிப்பிட்ட எடையில் உள்ள ஒரு கேபிளை ஹெலிகாப்டரில் இருந்து கீழறக்கி சோதித்த போது ஆப்ஷன் B-யில் காட்டி இருப்பது படி அந்த கேபிளின் ஷேப் இருந்தது.

பின்னர் வேறு வேறு முயற்சியையும் அவர் மேற்கொண்டார். மீண்டும் கேபிளை மேலே தூக்கிய அவர், அதன் முடிவில் 20-பவுண்டு எடை கொண்ட கெட்டில்பெல்லை இணைத்து கேபிளை கீழே இறக்கி, அது எப்படி பறக்கிறது என்பதை பார்த்தார். இதற்கு ஆப்ஷன் D பதிலாக கிடைத்தது. அடுத்து ஒரு எடையற்ற நீல கொடி ஒன்றை இணைத்தார்.

இப்போது மீண்டும் கேபிளை கீழிறக்கி பறக்க விட்ட போது சரியான பதில் கிடைக்காததால் திருப்தி அடையவில்லை. பின்னர் ஒரு பாராசூட்டை கேபிளுடன் இணைத்து பறக்க விட்டார். தொங்கும் கேபிளில் இணைக்கப்பட்டுள்ள பொருளை பொறுத்து பதில் மாற வாய்ப்புள்ளது என்று நேரடி சோதனை மூலம் விளக்கி இருக்கிறார் டெரெக் முல்லர்.

First published:

Tags: Helicopter, Physics, Science, Youtube