ஹோம் /நியூஸ் /உலகம் /

செலவுக்கு பணம் தராத பாட்டி... ஆத்திரத்தின் உச்சியில் அடுக்குமாடி குடியிருப்பை கொளுத்திய பேரன்..!

செலவுக்கு பணம் தராத பாட்டி... ஆத்திரத்தின் உச்சியில் அடுக்குமாடி குடியிருப்பை கொளுத்திய பேரன்..!

குடியிருப்புக்கு தீவைத்த வாலிபர்

குடியிருப்புக்கு தீவைத்த வாலிபர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaAnkaraAnkara

துருக்கியின் முரட்பசா  பகுதியில் உள்ள  அண்டல்யா பகுதியில் 63 வயதான ஹூல்யா என்ற பெண் வசித்து வந்தார். இவருடன் 46 வயதான பிலிஸ் கப்லான் என்ற மகளும், 28 வயது பேரன் ஒகன் அல்தாய் என்பவரும் உடன் வசித்து வந்தனர். பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் மூவரும் 7வது மாடியில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அன்று மாலை பேரன் ஒகன் அல்தாய் பாட்டியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால், பாட்டியோ பணம் தர மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒகன் தனது கையில் கொண்டுவந்திருந்த பெட்ரோலை ஊற்றி வீட்டிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ளான்.

முதலில் பாட்டி மீது தீப்பற்றி எரிந்த நிலையில், பாட்டியின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த இளைஞரின் அத்தையும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பணம் கேட்டு ரகளை செய்த பேரன் வைத்த தீயால் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு தளம் முழுமையாக தீப்பிடித்து எரிந்தது.

இதையும் படிங்க: சீன புத்தாண்டு கொண்டாட்டம்.. கூட்டத்தில் நுழைந்த மர்ம நபர்... துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி..!

தீப்புகையை சுவாசித்த வாலிபர் ஒகனும் மயக்கமடைந்துள்ளார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினரும் காவல்துறையும் தீயை அனைத்து பேரன் ஒகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அவரை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Fire, Murder, Turkey