6 மாத ஹாங்காங் போராட்டம்... கைதான மிகவும் இளம் போராளி...!

இதுவரையில் நடந்த போராட்டங்களில் சுமார் 4,500-க்கும் அதிகமான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 மாத ஹாங்காங் போராட்டம்... கைதான மிகவும் இளம் போராளி...!
ஹாங்காங் போராட்டம்
  • News18
  • Last Updated: November 22, 2019, 3:01 PM IST
  • Share this:
கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் ஹாங்காங் போராட்டத்தில் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களிலேயே மிகவும் இளம் போராளி ஆக ஒரு 12 வயது சிறுவன் உள்ளான்.

ஹாங்காங் நாட்டில் சீனாவுக்கும், ஹாங்காங் தலைமைக்கும் எதிரான போராட்டங்கள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்து வரும் போராட்டம் வன்முறைப் பாதையில் திரும்பியுள்ளது.

இதுவரையில் நடந்த போராட்டங்களில் சுமார் 4,500-க்கும் அதிகமான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது சொத்துகளை சேதப்படுத்திய காரணத்துக்காக இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தீ வைத்த காரணத்தினால் 12 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.


ஹாங்காங் போராட்டத்துலேயே இதுவரையில் கைதானவர்களுள் மிகவும் இளவயது போராளியாக இந்த 12 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். இம்மாணவனுக்கு 3 ஆண்டுகள் கண்காணிப்புடன் கூடிய கவுன்சிலிங் அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பார்க்க: 120 ஆண்டுகளுக்குப் பின் டைம்-ட்ராவல் செய்து மீண்டும் வந்துள்ள க்ரெட்டா தன்பெர்க்..?
First published: November 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading