ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆதரவுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 20 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில் தற்போது அந்நாடு தாலிபான்களின் கைகளுக்குச் சென்றுள்ளது. பழமைவாத சிந்தனை கொண்ட தாலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுக்குள் சென்றதிலிருந்து அந்நாடு குறித்த எண்ணற்ற நினைத்துப் பார்க்க முடியாத செய்திகள் வெளிவருகின்றன.
தற்போது ஒரு நகைச்சுவையான செய்தி உலக அளவில் வைரலாகிவருகிறது.மாலை மங்கும் நேரத்தில் அர்கந்தாப் நதிக்கரையில் படமாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சியில் தேசபக்திப் பாடல் ஒன்றுக்கு 7 தாலிபான்கள் இணைந்து நடனம் ஆடு்கின்றனர். இதுபோன்ற காட்சிகளை 20 ஆண்டுகளுக்கு முன்பாக நினைத்துக்கூட பார்க்க முடியாது என்கின்றனர் அங்குள்ள மக்கள்.
1996 முதல் 2001 வரையிலான தாலிபான்கள் ஆட்சியில் இசை மற்றும் நடனம் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் இந்தக் காட்சிகளை காண்போர், தேசபக்தி பாடல்களையாவது கேட்டு அதற்கு நடனம் ஆடும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்களே என்று கூறும் நிலையில், இன்னும் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை மறுத்து வருகிறார்களே என ஒரு சாரார் விவாதங்களை கிளப்பியுள்ளனர்.
https://www.youtube.com/watch?v=q2MxNrwgoJA
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, News On Instagram, Taliban