முகப்பு /செய்தி /உலகம் / 800 ஆண்டுகள் பழமையான ‘மம்மி’யை காதலி என தூக்கிக்கொண்டு திரிந்த இளைஞர்... திடுக்கிடும் தகவல்..!

800 ஆண்டுகள் பழமையான ‘மம்மி’யை காதலி என தூக்கிக்கொண்டு திரிந்த இளைஞர்... திடுக்கிடும் தகவல்..!

’மம்மி’யை மீட்ட போலீஸ்

’மம்மி’யை மீட்ட போலீஸ்

800 ஆண்டுகள் பழமையான மம்மியை காதலி என்று பையில் வைத்து திரிந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaPeru Peru

பெரு நகரில் 26 வயதுடைய ஜூலியோ சீசர் பெர்மேஜோ என்ற இளைஞர் ஐசோதெர்மல் பையில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்றை வைத்துக்கொண்டு பூங்காவில் திரிந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர்  விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த மம்மியை தனது காதலி என்று கூறியுள்ளார். மேலும் அதனைத் தனது நண்பர்களுக்குக் காண்பிப்பதற்காக எடுத்து வந்தாக கூறியுள்ளார்.  இதற்கு முன்னதாக அந்த இளைஞர்  உணவு டெலிவரி பணியில் இருந்தபோது அதே பையில் வைத்துத் தான் உணவு டெலிவரி செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

மம்மியை அவர் ஜுவானிட்டா என்று அழைத்துவந்துள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக இந்த மம்மி அவரின் வீட்டில் இருப்பதாகவும், அதனுடன் தான் தூங்குவதாகவும் இளைஞர் கூறியுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர் ஜூலியோ சீசரின் தந்தை அந்த மம்மியை வீட்டிற்குக் கொண்டுவந்துள்ளார்.

My spiritual girlfriend': Peru man found carrying 800-year-old mummy in  delivery bag - India Today

மம்மியை பறிமுதல் செய்து நடத்தப்பட்டு பரிசோதனையில், அந்த மம்மி சுமார் 45 வயது மிக்க ஆண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சுமார் 600 முதல் 800 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பெருவின் கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 1,300 கிமீ தொலைவில் உள்ள பெருவியன் ஆண்டிஸ் என்ற பகுதியைச் சேர்ந்த மம்மியாக இருக்கலாம் என்றும்  கணிக்கப்பட்டுள்ளது.

Also Read : போதைப்பொருள் கடத்தல்.. சர்ஜரி செய்து முகத்தையே மாற்றிய கிரிமினல்.. நூல்பிடித்து தட்டித்தூக்கிய போலீஸ்!

மேலும் அந்த மம்மியில் உடல் முழுவதும் கட்டுகள் போடப்பட்டுள்ளது. தற்போது அந்த மம்மியை கலாச்சாரத் துறை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 800 ஆண்டுகள் பழமையான மம்மியை காதலியாக எண்ணி வீட்டில் வைத்து பார்த்துக்கொண்ட சம்பவம் பெரு பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Mummy, Peru