Home /News /international /

நிர்வாணமாக திருமணம் செய்து கொண்ட இளம் காதல் ஜோடி: வைரலாகும் புகைப்படங்கள்

நிர்வாணமாக திருமணம் செய்து கொண்ட இளம் காதல் ஜோடி: வைரலாகும் புகைப்படங்கள்

வேலன்டின் மற்றும் ஆன்கா ஆர்சன்  (போட்டோ கர்ட்டசி - தி சன்)

வேலன்டின் மற்றும் ஆன்கா ஆர்சன் (போட்டோ கர்ட்டசி - தி சன்)

  • News18
  • Last Updated :
    இளம் காதல் ஜோடி நிர்வாணமாக திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

    இத்தாலி நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடியான வேலன்டின் மற்றும் ஆன்கா ஆர்சன் இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர்.

    வேலன்டின் மற்றும் ஆன்கா ஆர்சன் (போட்டோ கர்ட்டசி - தி சன்)


    இந்நிலையில் இந்த காதல் ஜோடி இருவருக்கும் இயற்கை மிகவும் பிடிக்கும் என்பதால் இவர்கள் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். இதற்கு இரு வீட்டில் உள்ள பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் இத்தாலியில் உள்ள தீவில் நிர்வாணமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு தங்களது நண்பர்கள் 2 பேரை மட்டுமே அழைத்துள்ளனர். அவர்களும் திருமணத்தின் போது நிர்வாணமாகவே கலந்து கொண்டனர்.

    வேலன்டின் மற்றும் ஆன்கா ஆர்சன்  (போட்டோ கர்ட்டசி - தி சன்)


    இது குறித்து மணப்பெண் ஆன்கா ஆர்சன் கூறுகையில், எங்களது இந்த நிர்வாண திருமண ஆசைக்கு பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால் தான் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைக்காமல் 2 பேரை மட்டும் அழைத்தோம். மேலும் இந்த ஆண்டு இறுதியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

    வேலன்டின் மற்றும் ஆன்கா ஆர்சன்  (போட்டோ கர்ட்டசி - தி சன்)


    இந்த காதல் ஜோடியின் நிர்வாண திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Anca Arsene, Italy, Nude wedding photos, Valentine tied, Young love couple

    அடுத்த செய்தி