ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மலாலா- க்ரெட்டா..! - இரு சர்வதேச போராளிகளின் சந்திப்பு ஏன்?

இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலாலா பகிர்ந்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மலாலா- க்ரெட்டா..! - இரு சர்வதேச போராளிகளின் சந்திப்பு ஏன்?
இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலாலா பகிர்ந்துள்ளார்.
  • News18
  • Last Updated: February 26, 2020, 2:48 PM IST
  • Share this:
காலநிலை போராளி க்ரெட்டா தன்பெர்க் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுஃப் ஆகிய இரண்டு இளம் போராளிகளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மலாலா பயின்று வருகிறார். 22 வயதான மலாலா படித்துக் கொண்டே தொடர்ந்து பெண் கல்விக்காகப் பல பணிகளைச் செய்து வருகிறார். 17 வயதான க்ரெட்டா தன்பெர்க் காலநிலையைக் காக்க வலியுறுத்தி ஸ்வீடனில் நடத்தியப் போராட்டத்தால் இன்று சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளார்.

பிரிட்டனின் ஒரு பகுதியில் பள்ளி மாணவர்கள் இணைந்து நடத்திய காலநிலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார் க்ரெட்டா. அருகில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மலாலாவை மரியாதை நிமித்தமாக க்ரெட்டா சந்தித்தார்.

View this post on Instagram
 
Thank you, @gretathunberg. ❤️

A post shared by Malala (@malala) on

இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலாலா பகிர்ந்துள்ளார்.

மேலும் பார்க்க: பதவியை ராஜினாமா செய்த மலேசிய பிரதமர்... எதிர்கட்சியில் இணைந்து ஆட்சியைப் பிடிக்கத் திட்டமா?
First published: February 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading