ஏமன் உள்நாட்டுப் போர்: ஸ்வீடனில் இன்று அமைதி பேச்சுவார்த்தை

ஏமன் உள்நாட்டுப் போர் குறித்து 2016-ம் ஆண்டு, குவைத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Web Desk | news18
Updated: December 6, 2018, 11:42 AM IST
ஏமன் உள்நாட்டுப் போர்: ஸ்வீடனில் இன்று அமைதி பேச்சுவார்த்தை
ஏமன் உள்நாட்டு போர்
Web Desk | news18
Updated: December 6, 2018, 11:42 AM IST
ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை நிறுத்துவது தொடர்பாக, ஸ்வீடனில் இன்று ஐ.நா முன்னெடுக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

ஏமன் நாட்டில் ஹவுதி போராட்டக்காரர்கள் மற்றும் அரசு படையினர் இடையே கடந்த 3 ஆண்டுகளாக உச்சக்கட்ட உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 56,000 பேர் கொல்லப்பட்டனர்.

லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி காலரா போன்ற கொடிய நோய்களின் தாக்கத்தாலும், பஞ்சம் அதிகரித்ததாலும், எண்ணற்ற குழந்தைகள் நாளுக்கு நாள் செத்து மடிகின்றன.

ஏமன் நாட்டு போரில் தரைமட்டமான கட்டிடங்கள்


இதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐ.நா.அமைப்பு, ஸ்வீடன் நாட்டில் இருத்தரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் ஹவுதி போராட்டக்குழு சார்பில் முகமது அப்துல் சலாம் குழுவினர் கலந்து கொள்கின்றனர்.

ஏமன் அரசாங்க பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்ம் வந்துள்ளனர். இதற்கு முன் 2016-ம் ஆண்டு, குவைத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Also see... வேகமாக உருகும் பனிப்பாறை....கரடிகள் அழியும் அபாயம்
Loading...
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...