• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஏமனில் உணவுக்காக கடும் நெருக்கடி.. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு - ஐ.நா.

ஏமனில் உணவுக்காக கடும் நெருக்கடி.. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு - ஐ.நா.

கடந்த 6 ஆண்டுகளாக நிகழும் போர், வெள்ளம், பொருளாதார வீழ்ச்சி, அத்துடன் கொரோனாவால் நிதி தட்டுப்பாடு நிலவுவதால் குழந்தைகள் நிலை மோசமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

  • Share this:
    ஏமன் நாட்டில் குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    அங்கு கடுமையான உணவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால், நடப்பாண்டு 15 புள்ளி 5 விழுக்காட்டிற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறைந்தது 2,50,000 கர்ப்பிணிகள் அல்லது தாய் பாலூட்டும் பெண்களுக்கு உடனடியாக ஊட்டச்சத்துக்கான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.



    கடந்த 6 ஆண்டுகளாக நிகழும் போர், வெள்ளம், பொருளாதார வீழ்ச்சி, அத்துடன் கொரோனாவால் நிதி தட்டுப்பாடு நிலவுவதால் குழந்தைகள் நிலை மோசமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: