ஹோம் /நியூஸ் /உலகம் /

தைவானைச் சென்றடைந்த 'Yellow Vest' போராட்டம்- வரி உயர்வுக்கு எதிராக களமிறங்கிய மக்கள்

தைவானைச் சென்றடைந்த 'Yellow Vest' போராட்டம்- வரி உயர்வுக்கு எதிராக களமிறங்கிய மக்கள்

paris protest (Representative image)

paris protest (Representative image)

தைவானின் வரி விதிப்புக் கொள்கைகள் சட்டவிரோதமானது என அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் தொடங்கிய 'Yellow vest' போராட்டம் தற்போது தைவான் நாட்டைச் சென்றடைந்துள்ளது. தைவானில் வரி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

பாரிஸில் மஞ்சள் உடை அணிந்து அரசின் வரி உயர்வுக்கு எதிராக மக்கள் சாலைகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறி சுமார் 10 பேர் பலியாகினர். இந்தப் போராட்டத்தால் மிகவும் நெருக்கடியைச் சந்தித்த பிரான்ஸ் அரசு மக்கள் கோரிக்கைக்கு இணங்கி வரிகளைக் குறைப்பதாக அறிவித்தது. இந்தப் போராட்டத்தின் வெற்றியைக் கண்டதாலே தற்போது தைவானில் 'Yellow vest' போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தைவான் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

பாரிஸ் நகரில் போல் போராட்டங்கள் வன்முறையாக வெடிக்காமல் அமைதியான வழியிலேயே தைவான் போராட்டம் நடைபெற்று வருகிறது. நடுத்தர மக்களை அழுத்தும் வரி விதிப்பைக் குறைக்கக் கோரி தைவான் மக்கள் அரசுக்கு எதிரானப் பதாதகைகள் உடன் சாலைகளில் அமைதி ஊர்வலம் சென்று தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

போராட்டம் தைவான் நிதி அமைச்சகம் முன்னர் நடைபெற்று வருகிறது. தைவான் நிதி அமைச்சகம் மிகவும் மோசமான துறை ஆகும். தைவானில் வறுமை தலைதூக்கியதற்கான முக்கியக் காரணமே நாட்டின் நிதித்துறை தான் அந்நாட்டு மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

உலகிலேயே அதிகம் வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் தைவான் 33-ம் இடத்திலும் பிரான்ஸ் 12-ம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: இந்தாண்டின் மிக குறைந்த விலையில் பெட்ரோல், டீசல்

First published:

Tags: Protest, Taiwan