ஹோம் /நியூஸ் /உலகம் /

பல ஆண்டுகள் பேச்சு இல்லை..ஆனால் ஒரு இமெயில் மூலம் மீண்டும் இணைந்த காதல் தம்பதி

பல ஆண்டுகள் பேச்சு இல்லை..ஆனால் ஒரு இமெயில் மூலம் மீண்டும் இணைந்த காதல் தம்பதி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விவாகரத்து செய்து ஆண்டு கணக்கில் பேசாமல் இருந்த ஜோடி ஒரு இமெயில் மூலம் மீண்டும் மறுமணம் செய்து வாழத் தொடங்கிய சம்பவம் ஆஸ்திரேலியாவில் அரங்கேறியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaCanberraCanberra

  ஆஸ்திரேலியாவின் டன்போகன் பகுதியில் வசித்து வரும் பெண் டேனில் குர்டிஸ். 42 வயதான இவர் தனது அழகான காதல் கதையை இணையப் பக்கத்தில் எழுதி பதிவிட்டுள்ளார். டேனிலுக்கு அதற்கு முன்னதாகவே திருமணமாகி சில மாதங்களிலேயே விவாகரத்து ஆகியிருந்தது. அவர் விவாகரத்துப் பெற்று இரு சிறிய குழந்தைகளை வளர்க்கும் தாயாக வாழ்ந்து வந்துள்ளார்.

  இவருக்கு டிம் குர்டிஸ் என்ற நபருடன் 20 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2002ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் நட்பு பின்னர் டேட்டிங் காதலாக உருவெடுத்துள்ளது. அறிமுகமான ஓராண்டு கழித்து 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி டேனிலிடம் டிம் குர்டிஸ் காதலை தெரிவித்துள்ளார். இருவருக்கு நன்றாக பிடித்துப் போக, 2004ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பெண்ணின் முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளை தத்தெடுத்துக்கொண்டார் டிம். தம்பதி இருவரும் சுமார் எட்டு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து குடும்பம் நடத்தி வந்தனர். இடைப்பட்ட காலத்தில் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.

  ஏழு குழந்தைகளுடன் டிம்-டேனில் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், 2012ஆம் ஆண்டு உலக பொருளாதார வீழ்ச்சியில் இவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வேறு வேலைத் தேடி டிம் குடிபெயர்ந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடைவெளி ஏற்பட்டு பேச்சு வார்த்தை குறைந்துள்ளது.தொடர்ந்து இருவருக்கும் இடையே கசப்பு ஏற்படவே 2015ஆம் ஆண்டில் விவாகரத்து செய்துள்ளனர்.

  பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேசாமல் தொடர்ந்த வாழ்ந்த நிலையில், டேனிலுக்கு டிம்முடன் பேசி இணைந்து வாழ எண்ணம் தோன்றியுள்ளது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டில் தனது மனதின் ஆசையை இமெயில் கடிதமாக எழுதி டிம்மிற்கு அனுப்பியுள்ளார் டேனில். இருவரும் மீண்டும் நேரில் சந்திக்கலாமா என டிம்மிடம் அந்த இமெயிலில் கேட்டிருந்தார் டேனில்.டிம்மும் அதற்கு ஓகே என பதில் அளித்த நிலையில், இருவரும் மீண்டும் சந்தித்துள்ளனர். இருவரும் தங்களிடம் முன்பிருந்த காதல் உணர்வு மறையாமல் நீடிப்பதை உணர்ந்துள்ளனர்.

  இதையும் படிங்க: போரிட்டு வெற்றி பெற தயாராக இருங்கள்.. ராணுவத்திற்கு சீன அதிபர் உத்தரவு

  தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அடிக்கடி சந்தித்து பேசிவந்த இருவரும், 2019ஆம் ஆண்டில் மீண்டும் மறுமணம் செய்து ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர்.வாழ்க்கையில் பிர்பெக்ட் ஆன நபரை எப்போதும் எதிர்பார்க்க முடியாது என்ற டேனில், மகிழ்ச்சியான காதல் திருமண வாழ்க்கை என்பது மரியாதையும் ஒருவரை ஒருவர் உரியமுறையில் தொடர்புகொள்வதிலும் தான் உள்ளது என்றார்.தங்கள் திருமண வாழ்க்கை வித்தியாசமானது என்றாலும் சரியான உறவுக்காக நாம் போராடுவது வொர்த்தானது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் டேனில்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Divorce, Love marriage, Marriage