Home /News /international /

YearEnder 2021 | 2021ல் உலகை உலுக்கிய 5 மோசமான இயற்கை பேரழிவுகள்!

YearEnder 2021 | 2021ல் உலகை உலுக்கிய 5 மோசமான இயற்கை பேரழிவுகள்!

ஜூன் மாதம் கனடாவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் ஏற்பட்ட மூச்சுத் திணற வைக்கும் கடும் வெப்ப அலை காரணமாக 5 நாட்களுக்குள் சுமார் 569 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் மாதம் கனடாவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் ஏற்பட்ட மூச்சுத் திணற வைக்கும் கடும் வெப்ப அலை காரணமாக 5 நாட்களுக்குள் சுமார் 569 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் மாதம் கனடாவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் ஏற்பட்ட மூச்சுத் திணற வைக்கும் கடும் வெப்ப அலை காரணமாக 5 நாட்களுக்குள் சுமார் 569 பேர் உயிரிழந்தனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதன் காரணமாக ஆண்டுக்கு சராசரியாக 60,000 பேர் இறக்கின்றனர். மேலும், உலகளாவிய இறப்புகளில் 0.1 சதவீதத்திற்கு இயற்கை சீற்றங்கள் காரணமாகின்றன. கோவிட்-19 தொற்று நோய் இரண்டாவது ஆண்டாக தீவிரமடைந்த நிலையில், உலகெங்கிலும் மற்றும் ஐரோப்பா, ஆசியா முழுவதும் உள்ள பல நாடுகள் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டன. பல நாடுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி மற்றும் புயல்களும் தாக்கின. 2021-ஆம் ஆண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் குறித்து இங்கே பார்க்கலாம்.

கனடியன் ஹீட்வேவ் (Canadian heatwave):

ஜூன் மாதம் கனடாவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் ஏற்பட்ட மூச்சுத் திணற வைக்கும் கடும் வெப்ப அலை காரணமாக 5 நாட்களுக்குள் சுமார் 569 பேர் உயிரிழந்தனர். இந்த நேரத்தில் வரலாறு காணாத வகையில் அங்கே வெப்பநிலை உயர்ந்தது. அங்குள்ள மாகாணம் மற்றும் பிரதேசங்கள் "heat dome" என்று அழைக்கப்பட்டன. வரலாறு காணாத அளவிலான கடும் வெப்பஅலைக்கு காலநிலை மாற்றம் காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க | கொரோனா முதல் பாண்டோரா வரை… 2021-ல் இந்தியாவில் நடந்த டாப் சம்பவங்கள்!

ஜெர்மனி வெள்ளம் (Germany’s cry):

60 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஜூலை மாதம், ஜெர்மனியின் பல தாழ்வான நகரங்கள் மற்றும் பகுதிகள் மிகவும் அழிவுகரமான வெள்ளத்தை பார்த்தன. பல தசாப்தங்களுக்கு பிறகு மிக மோசமான இயற்கை பேரழிவான வெள்ளத்தால் ஐரோப்பிய நாடான ஜெர்மனி பாதிக்கப்பட்டதில் சுமார் 170 பேர் இறந்தனர். வெள்ள பாதிப்பால் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட வசதிகளில் பாதிப்பை சந்தித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரங்களின் உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் மிக கடுமையாக சேதமடைந்தன. இவற்றை சீர் செய்ய பல வாரங்கள் பிடித்தது.

இத்தாலி தீ:

தெற்கு இத்தாலியில் வெப்ப காற்றினால் தூண்டப்பட்ட தீயால் தெற்கு கலாப்ரியாவுடன் சிசிலி நகரமும் கடந்த ஆகஸ்ட் மாதம் தீப்பிடித்தது. முழு பிராந்தியத்திலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட தீயை அணைக்கும் பணியில் அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஐரோப்பாவில் வெப்பநிலை 119.8 ஃபாரன்ஹீட் அல்லது 48.8 டிகிரி செல்சியஸ் என்ற வகையில் மிக அதிகமாக உயர்ந்தது, இது வரலாற்றில் மிக உயர்ந்த வெப்பநிலை என்று குறிப்பிடப்பட்டது.

கிரீஸை சூறையாடிய காட்டுத் தீ:

கிரீஸ் நாட்டை காட்டுத் தீ சூறையாடியதால் அந்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டது. சுமார் 580-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தீ பரவியதால், நாட்டின் இரண்டாவது பெரிய தீவான ஈவியா முற்றிலும் காலியானது. காட்டு தீ காரணமாக இயற்கை காடுகளின் ஒரு பெரிய பகுதி அழிக்கப்பட்டது. உயிரிழப்புகளும் பதிவாகி, பலர் காயமடைந்தனர்.

இதையும் படிங்க | 2021-ல் உலக அளவில் சாதனை படைத்த 5 இந்திய பெண்மணிகள்!

அமெரிக்க புயல்:

இடா சூறாவளி கடந்த ஆகஸ்ட் மாதம் மழைக்காலத்தில் அமெரிக்க கிழக்கு கடற்கரையை தாக்கியது. இது அமெரிக்க கண்டத்தை தாக்கிய வலிமையான சூறாவளியாக பதிவு செய்யப்பட்டது. இந்த சூறாவளியின் போது சுமார் 45 பேர் வரை உயிரிழந்தனர். Mississippi மாகாணம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.
Published by:Archana R
First published:

Tags: Disasters, YearEnder 2021

அடுத்த செய்தி