ஹோம் /நியூஸ் /உலகம் /

YearEnder 2021 | 2021-ல் உலக அளவில் சாதனை படைத்த 5 இந்திய பெண்மணிகள்!

YearEnder 2021 | 2021-ல் உலக அளவில் சாதனை படைத்த 5 இந்திய பெண்மணிகள்!

அழுத்தங்கள் அதிகம் நிறைந்த ஃபேஷன் துறையில் முக்கிய இடத்தை பிடித்தவர் லீனா நாயர்.

அழுத்தங்கள் அதிகம் நிறைந்த ஃபேஷன் துறையில் முக்கிய இடத்தை பிடித்தவர் லீனா நாயர்.

அழுத்தங்கள் அதிகம் நிறைந்த ஃபேஷன் துறையில் முக்கிய இடத்தை பிடித்தவர் லீனா நாயர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஆணாதிக்கம் அதிகம் நிறைந்த இந்த உலகில் பெண்கள் தங்களுக்கான பாதையை அமைத்து அதில் வெற்றி பெறுவது மிக சவாலான விஷயம். இருப்பினும், பல தடைகளை தாண்டி சில பெண்கள் உலக அளவில் சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டில் உலக அளவில் சாதனை படைத்த 5 இந்திய பெண்மணிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

லீனா நாயர்: பிரஞ்சு ஃபேஷன் ஹவுஸ் சேனல் (French fashion house chanel) என்கிற நிறுவனத்தின் சிஇஓ-வாக இவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளாக யூனிலீவர் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறையில் தலைமை அதிகாரியாகவும், நிர்வாகக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். அழுத்தங்கள் அதிகம் நிறைந்த ஃபேஷன் துறையில் முக்கிய இடத்தை பிடித்தவர் லீனா நாயர். மேலும், இவரது அணுகுமுறையால் எல்லாவித அழுத்தங்களையும் சிறப்பாக சமாளித்து வந்துள்ளார். இந்த 2021 ஆம் ஆண்டின் மிக சிறந்த பெண்மணியாக தேர்தெடுக்கப்பட்டதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1

பல்குனி நாயர்: 

நைக்கா (Nykaa) என்கிற ஃபேஷன் சார்ந்த நிறுவனத்தை தொடங்கி அதில் மாபெரும் வெற்றி கண்டுள்ளார் பல்குனி நாயர். தற்போது நைக்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும், சுயமாக உருவாகிய கோடீஸ்வரர்களில் ஒருவராகவும் இவர் உள்ளார். தற்போது, நைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் சுமார் 53 சதவீத பங்குகளை வைத்துள்ளார். ஒரு பங்கின் ஆரம்ப விலையான ரூ.2,001-இல் இருந்த பங்கு $6.5 பில்லியனுக்கும் அதிகமாக மாறியுள்ளது.

கீதா கோபிநாத்:

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வாழ் இந்தியராக உள்ள கீதா கோபிநாத், ஜெஃப்ரி ஒகமோட்டோ நிறுவனத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநராக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நியமிக்கப்படவுள்ளார். மேலும் இவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவில் சர்வதேச ஆய்வுகள் மற்றும் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர்.

இதையும் படிங்க | கொரோனா முதல் பாண்டோரா வரை… 2021-ல் இந்தியாவில் நடந்த டாப் சம்பவங்கள்!

திவ்யா கோகுல்நாத்:

பல்குனி நாயரை போன்று பெண் தொழிலதிபராக தனித்துவமான அந்தஸ்தை உருவாக்கி உள்ளவர் திவ்யா கோகுல்நாத். இவர் தற்போது பைஜுஸ் (Byju's) நிறுவனத்தில் தலைமை பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார். திவ்யா கோகுல்நாத், இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 4.05 பில்லியன் டாலர் மதிப்புடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ருச்சி கல்ரா:

இவர் ஆஃப் பிசினஸ் (OfBusiness) என்கிற நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். இந்த ஆண்டு ஜூலையில், ஸ்டார்ட்அப் யுனிகார்ன் போஸ்ட் சாப்ட்பேங்க் தலைமையில் $160 மில்லியன் நிதியாக மாறியுள்ளது. ஆஃப் பிசினஸ் நிறுவனமானது, உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் கவனம் செலுத்தி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மூலப்பொருள் கொள்முதல் மற்றும் கடன் வசதிகளை வழங்கும் தொழில்நுட்பம் சார்ந்த தளமாகும்.

First published:

Tags: India, Women achievers, YearEnder 2021