Yearender 2020: கிம் ஜாங்-உன், பப்ஜி மற்றும் கொரோனா ஊரடங்கு பற்றி வெளிவந்த அல்டிமேட் புரளிகள்!

Yearender 2020: கிம் ஜாங்-உன், பப்ஜி மற்றும் கொரோனா ஊரடங்கு பற்றி வெளிவந்த அல்டிமேட் புரளிகள்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

2021 என்ற புதிய ஆண்டில் பயணிக்க தயாராவதற்கு முன், 2020ல் நாம் கண்ட சில முக்கிய தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்திய சில மோசடிகள் / வதந்திகளைப் இப்போது பார்ப்போம். 

  • News18
  • Last Updated :
  • Share this:
2020ம் ஆண்டை இனி திரும்பி கூட பார்க்காமல், 2021ஐ இரு கரம் கூப்பி வரவேற்க வேண்டிய நேரம் இது. உங்களுக்கு அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களிடையே நம்பிக்கையுடன் இருக்கவும், நேர்மறையை பரப்புவதற்கான சரியான நேரம் இது. கொரோனா, குறிப்பாக முழு உலகமும் தொற்றுநோய்க்கு எதிராக போராடும்போது நம் வேண்டுதல்கள், கனிவான பேச்சு பலருக்கு ஆறுதலை அளிக்கும். 2021ம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமைய பலரும் கனவு காண்கின்றனர். 

மேலும் சிலர் தங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் யாவும் 2020ம் ஆண்டோடு மறைந்துபோக நம்பிக்கை கொண்டுள்ளனர்.  சிலர் வருகிற புத்தாண்டு, உலகம் முழுவதும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் என்று பிரார்த்தனை செய்கின்றனர்.  2021 என்ற புதிய ஆண்டில் பயணிக்க தயாராவதற்கு முன் இந்த 2020ல் நாம் கண்ட சில முக்கிய தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்திய சில மோசடிகள் / வதந்திகளைப் இப்போது பார்ப்போம். 

கிம் ஜாங்-உன் இறப்பு பற்றிய வதந்திகள் (Kim Jong-un death rumours) :

வட கொரிய (North Korea) அதிபர் கிம்-ஜாங் உன்னின் (Kim Jong-un) இறப்பு பற்றிய வதந்திகள் சமூக ஊடகங்களில் ஒரு புயலை கிளப்பியது. வடகொரியாவில் அடக்குமுறை ஆட்சியை மேற்கொண்டு வரும் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாகி, அவரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டால் அல்லது அவர் இறப்பை சந்திக்க நேரிட்டால் அந்த நாட்டை யார் ஆட்சி செய்வது என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இதை உலக நாடுகளும் அமைதியாக உற்று நோக்கி வந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் அவரது தங்கை கிம் யோ ஜோங் (Kim Yo-jong) ஏற்கனவே அந்த நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வருவதாக புரளி செய்திகள் வெளியானது. கிம் இறந்துவிட்டார் என்ற வதந்திகள் பரவியதால், நெட்டிசன்கள் அவரது சகோதரி கிம் யோ-ஜாங்கை (Kim Yo-jong) ஆதரிக்கத் தொடங்கினர். அவரது உடல்நிலை குறித்த பல்வேறு ஆதாரங்கள் ஊகங்களைத் தூண்டியதை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு செய்தி வெளியானது. ஏப்ரல் 12ம் தேதி செய்யப்பட்ட இதய அறுவை சிகிச்சைக்கு (heart operation) பின் அவர் கடுமையான சிக்கலை சந்தித்திருக்கலாம் என்று வதந்திகள் தெரிவித்தன. 

செப்டம்பர் மாதத்தில் பெரிய ஊரடங்கு விதிக்கப்படும்! (Major lockdown to be imposed again in September) : 

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் கோவிட் -19 பாதிப்புகளுக்கு இடையே, நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க செப்டம்பர் 25 முதல் உள்துறை அமைச்சகம் மற்றொரு ஊரடங்கை பரிந்துரைத்ததாக வதந்திகள் பரவின. அதிர்ஷ்டவசமாக, Press Information Bureau (PIB) வெளியிட்ட செய்தி ஒரு 'போலி செய்தி' ('Fake News') எச்சரிக்கை என்று கூறிய அறிக்கைகளை அரசாங்கம் நிராகரித்தது. செப்டம்பர் 25 முதல் மற்றொரு ஊரடங்கை விதிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) மத்திய அரசை பரிந்துரைத்ததாக ஒரு அறிக்கை சமூக ஊடகங்களில் வைரலாகியது. இந்தியாவில் கொரோனா (Corona) அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு பலரும் இன்னல்களுக்கு உள்ளதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்புகளுக்கு மத்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க செப்டம்பர் 25 முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அரசாங்கம் செப்டம்பர் 14ம் தேதி நிராகரித்தது. 

கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5G ஒரு பொறுப்பு (5G responsible for spreading coronavirus) : 

இது இந்த ஆண்டு முழுவதும் (Yearender 2020) கொரோனா வைரஸைச் சுற்றியுள்ள மற்றொரு வதந்தி. மொபைல் தொலைபேசி நெட்வொர்க்குகளில் 5G - செட் (5G - sed) மற்றும் ரேடியோ அலைகளால் மேற்கொள்ளப்படும் சிக்னல்கள், கொரோனா வைரஸின் பரவலுக்கு ஒரு முக்கிய கருவியாகும் என்ற புது வித வதந்தி பரவியது. சுவாரஸ்யமாக, இந்த வதந்தி இரண்டு தனித்தனி கேட்டகரிகளில் வந்தது. முதலாவதாக, 5G நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடும், இதனால் மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இரண்டாவதாக, 5G தொழில்நுட்பத்தின் மூலம் வைரஸ் பரவுகிறது என்பது தான் அதன் இரண்டு கேட்டகரி. இங்கிலாந்தில் (England) 5G நெட்வொர்க் சம்பந்தப்பட்ட ஒரு புரளி சில நாட்களுக்கு முன் வலம் வந்தது. இதன்படி கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் 5G மொபைல் டவர்களே எனச் சிலரால் கூறப்பட்டது. இதையடுத்து மக்கள் 5G மொபைல் டவர்களுக்குத் தீ வைத்துக் கொளுத்தும் சம்பவங்கள் அங்கு நடந்தேறியுள்ளன.

அர்ஷத் வார்சி 'பப்ஜி மொபைல் இந்தியா' மீண்டும் வருவதை அறிவிப்பார் (Arshad Warsi will announce Pubg Mobile India comeback) : 

PUBG மொபைல் இந்தியா (Pubg Mobile India) இந்தியாவில் தடை செய்யப்பட்டதிலிருந்து பல வதந்திகள் வெளிவந்துள்ளது. பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சி (Bollywood actor Arshad Warsi) ஒரு விளம்பரத்தில் PUBG மொபைல் இந்தியாவின் மறுபிரவேசத்தை அறிவிப்பார். மொபைல் கேம் பகிர்வு சமூகமான டேப்டாப் ஸ்டோரில் (TapTap Store) PUBG மொபைல் இந்தியாவின் போலி டிரெய்லர் தோன்றியது. டேப்டாப்பின் (TapTap) பப்ஜி மொபைல் இந்தியாவில் உள்ள டிரெய்லரில் பல்வேறு மாறுதல்கள் குறிப்பாக, உடைகள் இடம்பெற்றன. இருப்பினும், டிரெய்லர் போலியானது மற்றும் முறையானது அல்ல, என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. PUBGக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், அந்த கேம் இன்னும் பிரபலமடைந்து விட்டது போல் தெரிகிறது, அதன் மறுபிரவேசம், குறிப்பாக வெளியீட்டு தேதி மற்றும் விளையாட்டில் ஏதேனும் மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியானால் உடனே அவை வைரலாகின்றன. அது உண்மையா போலியா என்று கூட மக்கள் கவனிப்பதில்லை.

கொரோனா வைரஸ் வெளவால்கள் வழியாக பரவியது (Coronavirus spread through bats):-

2020 ஏப்ரல் மாதத்தில், உலகம் முழுவதையும் தாக்கிய ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில், ஆபத்தான வைரஸை பரப்புவதில் வெளவால்களின் பங்கு குறித்து சமூக ஊடகங்களில் அனல் பறக்கும் கருத்துக்கள் பரவின. வைரஸ் பரவலை விட அதிவேகமாக அந்த புரளிகள் இருந்தன. சீனாவில் வெளவால் சூப் (Bat soup) உட்கொள்ளும் மக்களிடமிருந்து இந்த வைரஸ் தோன்றியது என்று கொரோனா வைரஸைச் சுற்றி முதல் வதந்தி வந்தது. 2019ம் ஆண்டில் கொரோனா வைரஸின் ஆரம்ப பாதிப்புகள் வெளிவந்தபோது, ஒரு பெண் வெளவால் சூப் (Bat soup) சாப்பிடும் வீடியோ வைரலாகி, ஒரு பெரும் வதந்தி உருவானது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வைரஸ் பரவலில் வெளவால்களின் பங்கு எதுவும் இல்லை  என்று கூறினர். மேலும், ஒரு பெண் வெளவால் சூப் உட்கொள்ளும் வைரல்  வீடியோ சீனாவில் (China) படமாக்கப்படவில்லை என்றும், அது பலாவ் குடியரசில் எடுக்கப்பட்டது என்றும் பின்னர் ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.

Also read... ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட பிரேக் டான்ஸ்- தயாராகும் தமிழர்கள்!

ஒவ்வொரு ஆண்டும் இறுதி மாதத்தில் அதாவது டிசம்பர் மாதத்தில் அந்த ஆண்டில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் செய்தி ஊடகங்களில் தொகுத்து வழங்கப்படுவது இயல்பு. அந்த வகையில் இந்த ஆண்டு மிகவும் வித்தியாசமாக ஊரடங்கு ஏற்படுத்திய தாக்கம் உட்பட பல விஷயங்கள், வதந்திகளாக மக்களால் நம்பப்பட்டது. அந்த அளவில் மேற்சொன்னவை உலக மக்களால் அதிகம் நம்ம பட்ட வதந்திகள் ஆகும். மக்கள் சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை நம்புவதற்கு முன்னர் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து பின்னர் செயல்படுவது முக்கியம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: