2022 செப்டம்பர் மாதத்தில் மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பிரிட்டன், பிரேசில் ஆகிய நாடுகளில் புதிய தலைவர்கள் பொறுப்பேற்றனர். 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..
அக்டோபர் 1 , 2022 -இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டு போட்டியில் தோல்வியை தாங்காமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் மைதானத்தில் கலவரம் வெடித்தது.இந்த வன்முறையால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 130க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர்.
அக்டோபர் 3, 2022 - 2022 மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன ஹோமினின்கள் மற்றும் மனித பரிணாமத்தின் மரபணுக்கள் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 4, 2022 - இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸை சேர்ந்த அலய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 5, 2022 - வேதியியலுக்கான நோபல் பரிசு கரோலின் ஆர்.பெர்டோசி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே. பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 6, 2022 - இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் பெண் எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் - க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எல் அகுபேஷன் (L'occupation) என்ற புத்தகத்தை எழுதியதற்காக இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 7, 2022 - அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ்யை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிற்கு அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 10, 2022 - பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஸ்வா டி ஆங்க்ரிஸ்ட் மற்றும் கெய்டோ டபிள்யூ. இம்பென்ஸ் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 16, 2022 - நைஜீரிய நாட்டில் மிக மோசமான வெள்ள பாதிப்பு காரணமாக 600க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 13 லட்சம் மக்கள் இட பெயரும் சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.
அக்டோபர் 20, 2022 - பிரிட்டனின் பிரதமராக பதிவியேற்று 45 நாட்களே ஆன நிலையில் லிஸ் டிராஸ் தனது ராஜினாமா செய்தார்.பிரிட்டன் வரலாற்றில் மிகவும் குறைந்த காலத்தில் பதவியிலிருந்த பிரதமர் இவரே.
அக்டோபர் 22, 2022 - இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி பதவியேற்றார். இவர் தீவிர வலது சாரி கொள்கை கொண்டவர்.
அக்டோபர் 23, 2022 - சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக ஜி ஜின்பிங் 3ஆவது முறையாக தேர்வானார். இதன்மூலம் தனது அதிபர் பதவியை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்ட ஜி முன்னாள் அதிபர் மாவோவிற்கு பின்பு பெரிய சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.
அக்டோபர் 24, 2022 - பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக இந்திய வம்சாவெளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார். இவர் பிரபல ஐடி நிறுவனம் இன்போசிஸின் நிறுவனர் நாரயண மூர்த்தியின் மருமகன் ஆவார்.
அக்டோபர் 27, 2022 - உலகின் முன்னணி தொழிலதிபாரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார். நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் 4 பேரை உடனடியாக வேலையை விட்டு வெளியேற்றினார் எலான் மஸ்க்.
அக்டோபர் 30, 2022 - பிரேசில் நாட்டு பொதுதேர்தலில் அதிபர் ஜெர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். புதிய அதிபராக லீயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தேர்வானார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elon Musk, Nobel prize, Rishi Sunak, YearEnder 2022