2022 நவம்பர் மாதம் பாகிஸ்தான் அரசியலில் முக்கிய நிகழ்வாக அந்நாட்டின் இம்ரான் கான் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கி குண்டு காயங்களுடன் நூலிழையில் இம்ரான் கான் உயிர் தப்பினார். உலகின் முன்னணி தலைவர்கள் பங்கேற்ற ஜி 20 உச்சி மாநாடு இந்தோனேசியாவில் நடைபெற்றது. 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..
நவம்பர் 1 , 2022 - இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி பெரும்பான்மை பெற்றது. இதன் மூலம் அந்நாட்டின் பிரதமராக நெதன்யாகு மீண்டும் பதவியேற்றார்.
நவம்பர் 3, 2022 - பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கொலை முயற்சி. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வாசிராபாதில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காலில் குண்டுகாயத்துடன் இம்ரான் கான் உயிர் தப்பினார்.
நவம்பர் 8, 2022 - உகாண்டா நாட்டில் எபோலா தொற்று பரவல் தீவிரமானது. உயிரிழப்பு எண்ணிக்கை தாண்டியதால் அந்நாட்டில் லாக்டவுன் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 10, 2022 - ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அரசு பெண்கள் பூங்கா உள்ளிட்ட கேளிக்கை இடங்களுக்கு வர தடை விதித்து உத்தரவிட்டது.
நவம்பர் 14, 2022 - இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசினர். இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே நடைபெறும் முதல் நேரடி சந்திப்பு இதுவாகும்.
நவம்பர் 15, 2022 - உலகின் மக்கள் தொகை 800 கோடியை தாண்டியதாக ஐநா சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உலக மக்கள் தொகை 11 ஆண்டுகளில் 700 கோடியில் இருந்து 800 கோடியாக உயர்ந்தது.
நவம்பர் 15, 2022 - அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட உள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அந்நாட்டில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இது டிரம்பிற்கு நம்பிக்கையை தந்துள்ளது.
நவம்பர் 21, 2022- இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 252 பேர் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
நவம்பர் 24, 2022- மலேசிய பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைந்தது. அந்நாட்டின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்வு செய்யப்பட்டார்.
நவம்பர் 26, 2022 - உலகின் முன்னணி புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் டுனிக் ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் 2,500ஐ வைத்து மெகா நிர்வாண போட்டோ ஷூட் நடத்தினார்.தோல் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.
நவம்பர் 26, 2022 - சீனாவில் அரசின் கறாரான லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தினர். ஷிஜியாங் மாகாணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
நவம்பர் 28, 2022 - ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 451 போராட்டகாரர்கள் கொல்லப்பட்டதாகவும், சுமார் 18,000க்கும் மேறப்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்பு தெரிவித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: G20 Summit, Hijab, Imran khan, International, Iran, YearEnder 2022