ஹோம் /நியூஸ் /உலகம் /

நினைவுகள் 2022 - இலங்கையில் மீண்டும் ரணில்.. ஆஸ்திரேலியாவிலும் ஆட்சி மாற்றம்.. மே மாத முக்கிய சர்வதேச நிகழ்வுகளின் தொகுப்பு இதோ

நினைவுகள் 2022 - இலங்கையில் மீண்டும் ரணில்.. ஆஸ்திரேலியாவிலும் ஆட்சி மாற்றம்.. மே மாத முக்கிய சர்வதேச நிகழ்வுகளின் தொகுப்பு இதோ

ரணில் விக்ரமசிங்கே

ரணில் விக்ரமசிங்கே

2022ஆம் ஆண்டு மே மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, Indiacolombo colombo

2022-ம் ஆண்டின் முக்கிய சர்வதேச  நிகழ்வுகளை மாதங்கள் வாரியாக நாம் திரும்பி பார்க்கலாம்.  மே மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..

மே 1, 2022 - உக்ரைன் மீது ரஷ்ய போர் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையிலான நாடாளுமன்ற குழு உக்ரைன் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தது.

மே 7, 2022   - ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியாளர்கள் பெண்களுக்கு ஹிஜாப் கட்டுப்பாட்டை கொண்டு வந்தனர். பொதுவெளியில் பெண்கள் தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் விதத்தில் ஹிஜாப் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மே 9, 2022  -இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கு அடிபணிந்து மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

மே 12, 2022  - வட கொரியாவில் ஒரு நபருக்கு ஒமிக்ரான் கோவிட் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அந்நாட்டு அரசு நாடு தழுவிய லாக்டவுனை அறிவித்தது.

மே 12, 2022 - இலங்கை பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பொறுப்பேற்றார்.

மே 15, 2022  - உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் தங்களை NATO படையில் சேர்க்க கோரி விண்ணப்பித்தன. ரஷ்யா - NATO அமைப்பு விவகாரத்தில் நடுநிலை வகித்து வந்த இந்நாடுகள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டன.

இதையும் படிங்க: நினைவுகள் 2022 - உலக அழகியாக தேர்வான போலாந்து பெண்.. அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை.. மார்ச் மாத முக்கிய சர்வதேச நிகழ்வுகளின் தொகுப்பு இதோ

மே 16, 2022  -இலங்கையில் கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் தான் ஸ்டாக்கில் உள்ளது என புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் ரணில் அறிவித்தார்.

மே 21, 2022 -ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி ஆட்சியை இழந்தது. புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் ஆந்தோனி அல்பானீஸ் தேர்வானார்.

மே 24, 2022 -குவாட் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டது.

மே 25, 2022 -உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வானார். கொரோனா பெருந்தொற்று விவகாரத்தில் இவர் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 30, 2022 -நேபாள நாட்டின் முஸ்டாங் மாவட்ட மலைத் தொடர் அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் இந்தியர்கள் ஆவர்.

First published:

Tags: International, Ranil Wickremesinghe, Russia - Ukraine, Sri Lanka political crisis, YearEnder 2022