ஹோம் /நியூஸ் /உலகம் /

நினைவுகள் 2022 - உலக அழகியாக தேர்வான போலாந்து பெண்.. அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை.. மார்ச் மாத முக்கிய சர்வதேச நிகழ்வுகளின் தொகுப்பு இதோ

நினைவுகள் 2022 - உலக அழகியாக தேர்வான போலாந்து பெண்.. அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை.. மார்ச் மாத முக்கிய சர்வதேச நிகழ்வுகளின் தொகுப்பு இதோ

2022 உலக அழகியாக கரோலினா தேர்வு

2022 உலக அழகியாக கரோலினா தேர்வு

2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaIslamabadIslamabadIslamabadIslamabadIslamabad

2022ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டை உலகம் எதிர்நோக்கியுள்ளது. இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் கொரோனா வாட்டி வதைத்தை நிலையில், 2022இல் தான் பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. இருப்பினும், ஆண்டின் இறுதி கட்டத்தில் சீனாவில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் மீண்டும் உஷார் நிலையில் உள்ளன.

அத்துடன், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தாண்டின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதேபோல், கிரிப்டோகரன்சியின் வீழ்ச்சி, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது, பாகிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இலங்கை பொருளாதாரா நெருக்கடி ஆகியவையும் இந்தாண்டின் முக்கிய சர்வதேச நிகழ்வுகள். இது போன்ற முன்னணி சர்வதேச நிகழ்வுகளை மாதங்கள் வாரியாக நாம் திரும்பி பார்க்கலாம்.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..

மார்ச் 3, 2022

- உக்ரைனின் முன்னணி நகரங்களை முற்றுகையிட்டு ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.ஐரோப்பாவின் மிகப் பெரிய Zaporizhzhya அணு உலையை ரஷ்ய படையினர் கைப்பற்றினர்.

மார்ச் 4, 2022 

- பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள ஷியா மசூதியில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 56 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

மார்ச் 7,2022

- ரஷ்ய படையெடுப்பு காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 17 லட்சம் மக்கள் வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐநா சபை ஆய்வு தெரிவித்தது.

மார்ச் 12, 2022

- நவீன வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அரேபிய அரசு ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது.

மார்ச் 16, 2022

- பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 4 ஆண்டுகளுக்குப் பின் வட்டி விகத்தை உயர்த்தி அறிவித்தது.கொரோனா பரவல், அதைத்தொடர்ந்து ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது.

இதையும் படிங்க: மூளையை முடக்கும் அமீபா தொற்று ; மிரட்டும் புதிய நோய்க்கு முதல் பலி...!

மார்ச் 17,2022

- 2022 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக போலாந்து நாட்டின் அழகி கரோலினா தேர்வு செய்யப்பட்டார்.இவருக்கு வயது 23.

மார்ச் 21,2022

- சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் அந்நாட்டில் குனாங்சி பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளனது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் மரணமடைந்தனர்.

மார்ச் 22, 2022

- வரலாற்றில் முதல் முறையாக மனித ரத்தத்தில் பிளாஸ்ட் துகள் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. நெதர்லாந்து நாட்டின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்தனர்.

மார்ச் 27, 2022

- சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்கியது. இதன் காரணமாக சுமார் 2.5 கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரில் 9 நாள்கள் முழு லாக்டவுன் போடப்பட்டது.

மார்ச் 28, 2022

- பாகிஸ்தானில் இம்ரான்கானின் PTI கட்சிக்கு ஆதரவளித்து வந்த முட்டாஹிதா குவாமி இயக்கம் கட்சி (MQM-P) ஆதரவை விலக்கியது. நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழந்த நிலையில், அரசின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.

First published:

Tags: China, Imran khan, Miss World, Russia - Ukraine, YearEnder 2022