2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..
ஜூன் 4, 2022 - உலகின் 27 நாடுகளில் குரங்கம்மை என்ற மங்கிபாக்ஸ் தொற்று பரவியதாக உலக சுகாதார அமைப்பு தகவல். உலக நாடுகள் உஷாராக இருக்க எச்சரிக்கை விடுத்தது.
ஜூன் 5, 2022 - நைஜீரிய நாட்டில் கத்தோலிக்க தேவாலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டனர்.
ஜூன் 6, 2022 - பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 211-148 ஓட்டு கணக்கில் பிரதமர் போரீஸ் ஜான்சன் கட்சி வெற்றி. இதனால் போரிஸ் ஜான்சன் பதவி தப்பியது.
ஜூன் 9, 2022 - தாய்லாந்து அரசு கஞ்சா செடிகளை வளர்க்கவும் விற்கவும் சட்ட அனுமதி தந்தது. கஞ்சாவுக்கு சட்ட அனுமதி அளித்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடு தாய்லாந்து ஆகும்.
ஜூன் 18, 2022 - வங்கதேச நாட்டில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்நாட்டில் 40 லட்சம் மக்கள் வீடுகள் மின்சாரமின்றி தவித்தனர்.
ஜுன் 19, 2022 - கொலம்பியாவில் முதல் இடதுசாரி அரசு ஆட்சி அமைத்தது. M-19 கொரில்லா இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான குஸ்டாவ் பெட்ரோ அந்நாட்டின் புதிய அதிபரானார்.
ஜூன் 22, 2022 - ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜூன் 22, 2022 - அமெரிக்க நாட்டின் தலைமை அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த ஆர்த்தி பிரபாகர் என்ற பெண் நியமிக்கப்பட்டார்.
ஜூன் 30 2022- பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய பிரதமராக பெர்டினாட் மார்கோஸ் பதவியேற்றார். இவர் அந்நாட்டின் முன்னாள் அதிபர் போங்போங் மார்கோஸ்சின் மகன் ஆவார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Monkeypox, Russia - Ukraine, Sri Lanka political crisis, YearEnder 2022