2022ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டை உலகம் எதிர்நோக்கியுள்ளது. இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் கொரோனா வாட்டி வதைத்தை நிலையில், 2022இல் தான் பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. இருப்பினும், ஆண்டின் இறுதி கட்டத்தில் சீனாவில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் மீண்டும் உஷார் நிலையில் உள்ளன.
அத்துடன், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தாண்டின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதேபோல், கிரிப்டோகரன்சியின் வீழ்ச்சி, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது, பாகிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இலங்கை பொருளாதாரா நெருக்கடி ஆகியவையும் இந்தாண்டின் முக்கிய சர்வதேச நிகழ்வுகள். இது போன்ற முன்னணி சர்வதேச நிகழ்வுகளை மாதங்கள் வாரியாக நாம் திரும்பி பார்க்கலாம்.
2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..
ஜூலை 7,2022 - பிரிட்டன் நாட்டில் 40க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். கட்சியின் அழுத்தம் காரணமாக பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார்.
ஜூலை 8, 2022 - ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே தேர்தல் பரப்புரையின் போது படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
ஜூலை 9, 2022 -இலங்கையில் ஆயிரக்கணக்கான போராட்டகாரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு சூறையாடினர். அதிபர் கோத்தபயா குடும்பத்தினருடன் தப்பியோட்டம்.
ஜூலை 11, 2022 - நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தை படம்பிடித்து அனுப்பியது. பிரபஞ்சத்தின் முதலாவது வண்ணப் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார்.
ஜூலை 13, 2022 - உள்நாட்டு கிளர்ச்சியால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அந்நாட்டில் இருந்து தப்பித்து மாலத்தீவில் தஞ்சமடைந்தார்.
ஜூலை 15, 2022 - இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரதமர் பொறுப்பில் இருந்த ரணில் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.
ஜுலை19, 2022 - பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்ப காற்று பாதிப்பு பதிவு. இங்கிலாந்து வரலாற்றில் முதல்முறையாக வெப்பம் 40 டிகிரியை தாண்டி பதிவானது.
ஜூலை 23, 2022 - குரங்கம்மை எனப்படும் மங்கிபாக்ஸ் தொற்றை உலக சுகாதார பேரிடராக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 75க்கும் மேற்பட்ட நாடுகளில் 16,000க்கும் மேற்பட்டோரை இந்த தொற்று பாதித்தது.
ஜூலை 27, 2022 - ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்த அங்கோலா நாட்டில் உலகின் மிகப் பெரிய இளஞ்சிவப்பு வைரம் கண்டெடுக்கப்பட்டது. 170 கேரட் எடை கொண்ட இந்த வைரத்திற்கு 'Lulo Rose'
ஜூலை 31 2022- அல்கொய்தா அமைப்பின் முன்னணி தலைவரும், இரட்டை கோபுர தாக்குதல் சதித் திட்டத்தில் முக்கிய மூளையாக இருந்தவருமான அய்மன் அல்-ஜவாஹிரியை அமெரிக்க படைகள் கொன்றன. ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த அய்மானை அமெரிக்க படைகள் ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Monkeypox, Russia - Ukraine, Shinzo Abe, Sri Lanka political crisis, YearEnder 2022