2022ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டை உலகம் எதிர்நோக்கியுள்ளது. இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் கொரோனா வாட்டி வதைத்தை நிலையில், 2022இல் தான் பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. இருப்பினும், ஆண்டின் இறுதி கட்டத்தில் சீனாவில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் மீண்டும் உஷார் நிலையில் உள்ளன.
அத்துடன், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தாண்டின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதேபோல், கிரிப்டோகரன்சியின் வீழ்ச்சி, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது, பாகிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இலங்கை பொருளாதாரா நெருக்கடி ஆகியவையும் இந்தாண்டின் முக்கிய சர்வதேச நிகழ்வுகள். இது போன்ற முன்னணி சர்வதேச நிகழ்வுகளை மாதங்கள் வாரியாக நாம் திரும்பி பார்க்கலாம்.
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..
1.ஜனவரி 3 - அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் கொரோனா பரவல் உச்சம் தொட்டன. ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் 10 லட்சம் புதிய கோவிட்-19 பாதிப்பு பதிவானது.
2. ஜனவரி 3 - உலகின் முதல் 3 டிரில்லியன் டாலர் நிறுவனம், அதாவது 3 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பு நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் உருவெடுத்தது. ஒப்பீட்டு அளவில் பார்த்தால் ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தை விட கூடுதல் சந்தை மதிப்பை நிறுவனம் கொண்டுள்ளது.
3. ஜனவரி 5 - கசகஸ்தான் நாட்டில் பெரும் உள்நாட்டு கிளர்ச்சி வெடித்தது. எரிவாயு தட்டுப்பாடு, விலை உயர்வை எதிர்த்து நடைபெற்ற கிளர்ச்சியில் 164 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக அந்நாட்டில் அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்டது.
4. ஜனவரி 7 - இருதய மாற்று அறுவை சிகிச்சையில் புதிய சாதனையாக அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற நபருக்கு பன்றியின் இதயத்தை பெருத்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர். அந்நாட்டின் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்து காட்டினர்.
5. ஜனவரி 10 - அமெரிக்காவைச் சேர்ந்த மாயா ஏஞ்சலாவின் உருவம் பொறித்த நாணயத்தை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசு நாணயத்தில் இடம் பிடித்த முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மாயா ஏஞ்சலா பெற்றார்.
6. ஜனவரி 12 - கோவிட்-19 லாக்டவுன் கட்டுப்பாடுகளை மீறி மது விருந்தில் பங்கேற்றதாக பிரிட்டனின் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: உலகளவில் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது - ஐக்கிய நாடுகள் அறிவிப்பு!
7. ஜனவரி 13 - ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்பம் பதிவானது. அந்நாட்டின் ஓன்ஸ்லோ பகுதியில் 50.7 டிகிரி வெப்பம் பதிவானது.
8. ஜனவரி 13 - பாலியல் புகார்களுக்கு ஆளானாதால் பிரிட்டன் நாட்டின் இளவரசர் ஆண்ட்ரூவின் ராணுவ பட்டங்கள் பறிக்கப்பட்டன.
9. ஜனவரி 14 - உக்ரைன் நாட்டின் 70க்கும் மேற்பட்ட அரசு இணையதங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழலை மேலும் வலுப்படுத்தும் விதமாக தாக்குதல் நடத்தப்பட்டது.
10. ஜனவரி 30 - போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரதமர் ஆன்டோனியோ கோஸ்டா மீண்டும் பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Events, International, Omicron, Russia - Ukraine, YearEnder 2022