2022ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டை உலகம் எதிர்நோக்கியுள்ளது. இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் கொரோனா வாட்டி வதைத்தை நிலையில், 2022இல் தான் பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. இருப்பினும், ஆண்டின் இறுதி கட்டத்தில் சீனாவில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் மீண்டும் உஷார் நிலையில் உள்ளன.
அத்துடன், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தாண்டின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதேபோல், கிரிப்டோகரன்சியின் வீழ்ச்சி, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது, பாகிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இலங்கை பொருளாதாரா நெருக்கடி ஆகியவையும் இந்தாண்டின் முக்கிய சர்வதேச நிகழ்வுகள். இது போன்ற முன்னணி சர்வதேச நிகழ்வுகளை மாதங்கள் வாரியாக நாம் திரும்பி பார்க்கலாம்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..
1.பிப்ரவரி 1 -ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி மாற்றம் ஏற்பட்டதால் அந்நாட்டில் இருந்து வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 10 லடச்சத்தை தாண்டியது.
2. பிப்ரவரி 3 - சிரியாவில் அமெரிக்க சிறப்பு படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாஸ்மி அல் குரேஷி தற்கொலை தாக்குதல் மூலம் உயிரை மாய்த்துக்கொண்டார்.
3. பிப்ரவரி 3- கோவிட் பரவலை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா அந்நாட்டு குடிமக்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கியது. தடுப்பூசியை கட்டாயமாக்கிய முதல் ஐரோப்பிய நாடு இதுவே.
4. பிப்ரவரி 6- இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து பிளாட்டினம் ஜூப்ளி கொண்டாடப்பட்டது. இதன்மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றார்.
5. பிப்ரவரி 9 - ஆப்ரிக்கா நாடான நைஜீரியாவில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலுக்கு வந்ததால், பீயர் உள்ளிட்ட மதுக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரே இடத்தில் வைத்து 40 லட்சம் பீயர் பாட்டில்கள் அழிக்கப்ட்டன.
இதையும் படிங்க: போதுமடா சாமி... 12 மனைவிகளிடம் கதறும் 102 குழந்தைகளின் தகப்பன்!
6. பிப்ரவரி 13 - கனடா நாட்டில் லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு கடும் நெருக்கடியை சந்தித்தது.
7. பிப்ரவரி 15 - பிரேசில் நாட்டில் நூற்றாண்டு காணாத மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 150க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடைமைகளை இழந்து தவித்தனர்.
8. பிப்ரவரி 20 - 95 வயதான பிரிட்டன் ராணி எலிசபெத்திற்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக ராணியின் பிளாட்டினம் ஜூப்பளி கொண்டாட்டங்கள் சுணக்கம் கண்டது.
9. பிப்ரவரி 24 - பனிப்போருக்குப் பின் ரஷ்யா நேட்டோ நாடுகளுக்கு இடையே முக்கிய மோதலாக ரஷ்யா- உக்ரைன் இந்த மாதத்தில் தான் தொடங்கியது. உக்ரைன் மீதான போர் தாக்குதலை ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் பிப்ரவரி 24ஆம் தேதி அறிவித்தார்.
10. பிப்ரவரி 27 - வின்வெளி ஆய்வுத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வரும் சீனா ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோள் செலுத்தி புதிய சாதனை படைத்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Events, International, Russia - Ukraine, YearEnder 2022