ஹோம் /நியூஸ் /உலகம் /

நினைவுகள் 2022 - தைவான் விவகாரத்தில் சீனாவை சீண்டிய அமெரிக்கா..சல்மான் ருஷ்திக்கு கத்தி குத்து..ஆகஸ்ட் மாத முக்கிய சர்வதேச நிகழ்வுகளின் தொகுப்பு இதோ

நினைவுகள் 2022 - தைவான் விவகாரத்தில் சீனாவை சீண்டிய அமெரிக்கா..சல்மான் ருஷ்திக்கு கத்தி குத்து..ஆகஸ்ட் மாத முக்கிய சர்வதேச நிகழ்வுகளின் தொகுப்பு இதோ

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் சோவியத் அரசின் கடைசி தலைவர் கோர்பசோவ்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் சோவியத் அரசின் கடைசி தலைவர் கோர்பசோவ்

year ender 2022: 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaMoscowMoscow

2022ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டை உலகம் எதிர்நோக்கியுள்ளது. இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் கொரோனா வாட்டி வதைத்தை நிலையில், 2022இல் தான் பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. இருப்பினும், ஆண்டின் இறுதி கட்டத்தில் சீனாவில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் மீண்டும் உஷார் நிலையில் உள்ளன.

அத்துடன், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தாண்டின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதேபோல், கிரிப்டோகரன்சியின் வீழ்ச்சி, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது, பாகிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இலங்கை பொருளாதாரா நெருக்கடி ஆகியவையும் இந்தாண்டின் முக்கிய சர்வதேச நிகழ்வுகள். இது போன்ற முன்னணி சர்வதேச நிகழ்வுகளை மாதங்கள் வாரியாக நாம் திரும்பி பார்க்கலாம்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..

ஆகஸ்ட் 3, 2022 -சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி அரசுமுறை சுற்றுப் பயணமாகத் தைவானுக்குச் சென்றார். தைவானின் ஜனநாயக நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தரும் என உறுதி தெரிவித்தார்.

ஆகஸ்ட் 8, 2022 - அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பிளோரிடா வீட்டில் அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான FBI அதிகாரிகள் சோதனை நடத்தினர். முறையற்ற வகையில் அரசு அவணங்களை கையாண்ட புகாரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஆகஸ்ட் 12, 2022- பிரிட்டன் நாட்டின் 8 பகுதிகளில் வறட்சி நிலவுவதாக அரசு அறிவித்தது. 1976ஆம் ஆண்டுக்குப் பின் மிக மோசமான வறட்சியை அந்நாடு சந்தித்தது.

ஆகஸ்ட் 12, 2022- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்திக்கு கத்தி குத்து. கொலை வெறித் தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான் ருஷ்தி மருத்துவ சிகிச்சையின் காரணமாக உயிர் தப்பினார்.

ஆகஸ்ட் 15, 2022 - உலகின் முதல் நாடாக ஸ்காட்லாந்து, மாதவிடாய் சார்ந்த பொருள்களை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. பெண்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: உலகளவில் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது - ஐக்கிய நாடுகள் அறிவிப்பு!

ஆகஸ்ட் 22, 2022 - அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் பதவியில் இருந்து விலகுவதாக ஆந்தோனி பாச்சி அறிவித்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சர்வதேச அளவில் முன்னணி சுகாதார நிபுணராக இவர் பார்க்கப்பட்டார்.

ஆகஸ்ட் 23, 2022 -நிதி முறைகேடு விவகாரத்தில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ராசக்கிற்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவரின் முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், நஜீப் சிறை வாசத்தை தொடங்கினார்.

ஆகஸ்ட் 24, 2022 - மிகக் குறைவான வயதில் உலகை தனியாக சுற்றி வலம் வந்த நபர் என்ற சாதனையை பெல்ஜியத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மாக் ரூதர்போர்ட் படைத்தார். இவர் 5 மாத பயணத்தில் 52 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 28, 2022 - பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத கனமழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், சர்வதேச நாடுகளிடம் பாகிஸ்தான் அரசு நிதியுதவி கோரியது.

ஆகஸ்ட் 30, 2022 - சேவியத் ரஷ்யாவின் கடைசி தலைவரான மிக்கேல் கோர்பச்சோவ் காலமானார். 91 வயதான கோர்பச்சோவ் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார்.

First published:

Tags: International, Russia, YearEnder 2022