ஹோம் /நியூஸ் /உலகம் /

நினைவுகள் 2022 - இலங்கையில் அவசர நிலை பிரகடணம்.. ட்விட்டரை விலை பேசிய எலான் மஸ்க்..ஏப்ரல் மாத நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..!

நினைவுகள் 2022 - இலங்கையில் அவசர நிலை பிரகடணம்.. ட்விட்டரை விலை பேசிய எலான் மஸ்க்..ஏப்ரல் மாத நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..!

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

நினைவுகள் 2022 - ஏப்ரல் மாத நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, Indiacolombo colombo colombo

2022ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டை உலகம் எதிர்நோக்கியுள்ளது.   ரஷ்யா-உக்ரைன் போர் 2022-ம் ஆண்டின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதேபோல், கிரிப்டோகரன்சியின் வீழ்ச்சி, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது, பாகிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இலங்கை பொருளாதாரா நெருக்கடி ஆகியவையும் இந்தாண்டின் முக்கிய சர்வதேச நிகழ்வுகள். இது போன்ற முன்னணி சர்வதேச நிகழ்வுகளை மாதங்கள் வாரியாக நாம் திரும்பி பார்க்கலாம்.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..

ஏப்ரல் 1 - இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி  ஏற்பட்ட நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச அந்நாட்டில் அவரச நிலையை பிரகடனம் செய்தார்.
ஏப்ரல் 4 - ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க். இதன் மூலம் நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் ஆனார்.
ஏப்ரல் 10 - பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் வெளியேற்றப்பட்டார்.
ஏப்ரல் 11 - பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார். இவர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஆவார்.
ஏப்ரல் 13 - தென்னாப்ரிக்க நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு காரணமாக 448 பேர் மரணமடைந்தனர். வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா அறிவித்தார்.
 ஏப்ரல் 24 - பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அந்நாட்டில் அதிபர் பதவியில் இருக்கும் நபர் மீண்டும் வெற்றி பெறுவது 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.
ஏப்ரல் 25 - ட்விட்டர் நிறுவனத்தை தான் முழுமையாக வாங்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இதற்காக 44 பில்லியன் அமெரிக்க டாலர் தருவதாக ஒப்பந்தம் பேசி முடித்தார்.
ஏப்ரல் 25 - உலகின் மிகவும் வயதான நபர் என்கிற கின்னஸ் சாதனையை படைத்த ஜப்பானிய மூதாட்டியான கேன் தனகா 119ஆவது வயதில் காலமானார்.
ஏப்ரல் 28 - ரஷ்ய படையெடுப்புக்கு பின் முதல்முறையாக ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் உக்ரைன் நாட்டிற்கு சென்றார். அவரின் வருகையின் போதும் ரஷ்ய படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தின.
ஏப்ரல் 30 - உலகின் மிக பெரிய தொங்கும் கண்ணாடி பாலமான பாக் லாங்(Bach Long) பாலம் வியட்நாமில் திறக்கப்பட்டது. தரையில் இருந்து 492 அடியில் தொங்கும் இந்த பாலத்தின் நீளமானது 2,073 அடியாகும்.
First published:

Tags: Emmanuel Macron, Imran khan, Russia - Ukraine, Sri Lanka political crisis, YearEnder 2022