அமெரிக்காவில் தெருக்களில் மக்கள் சிலர் ஜாம்பி போல் நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு சைலாசின் (Xylazine)என்ற போதைப்பொருள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அப்படி அந்த போதை மருந்து என்ன செய்யும், அதனை எடுத்துக்கொண்டால் ஏன் ஜாம்பி போல் மாறுகின்றனர் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
சைலாசின் (Xylazine) என்ற மருந்தை tranq அல்லது tranq dope என்று அழைக்கின்றனர். மேலும் தற்போது இந்த மருந்தை ”ஜாம்பி போதை மருந்து” என்று குறிப்பிடுகின்றனர். இந்த மருந்து அமெரிக்காவில் உபயோகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்து தான். ஆனால் அது மனிதர்களுக்கு கிடையாது, விலங்குகளுக்கு மட்டும் தான். சிலர் இந்த மருந்தைத் தவறாகப் பயன்படுத்தி போதை மருந்தாக விற்பனை செய்து வருகின்றனர்.
சைலாசின் என்ற அந்த போதை மருந்தை மனிதர்கள் உட்கொள்ளும் போது உடலின் சருமம் அழுகுதல், கால் மற்றும் பாதங்களில் ஓட்டை உண்டாதல் மற்றும் மறதி போன்றவை ஏற்படுகிறது. குறிப்பாகச் சருமம் சுருங்குவதால் உடல் உறுப்புகள் சோர்வடைந்து மெதுவாக ஜாம்பி போல் நடக்கச் செய்கிறது. இந்த கொடூரமான போதை மருந்தை எடுத்துக்கொள்ளும் நபர்கள் நடக்க முடியாமல் தெருக்களில் ஜாம்பி போல் செயல்படும் வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Brooo, what’s happening in the USA🙆🏽♂️💀? pic.twitter.com/hUJCjZ5Xlx
— Oyindamola🙄 (@dammiedammie35) December 6, 2022
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், இந்த போதை மருந்து குறித்து தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகம் உட்கொள்ளுவதால் மறதி, மூச்சு விடுவதில் சிரமம், இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்த கொதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
முதலில் அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) என்ற பகுதியில் சைலாசின் போதை மருந்து உபயோகிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இதன் பயன்பாடு சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளுக்குப் பரவி உள்ளது. நியூயார்க் நகர சுகாதாரத் துறை தகவலின்படி 2021 ஆம் ஆண்டு வரை 2,668 பேர் சைலாசின் போதை மருந்தை அதிகளவில் பயன்படுத்தி இறந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போதை மருந்துக்கு அடிமையானால், மிகவும் கொடூரமான பக்க விளைவுகள் ஏற்படுவதுடன் உயிருக்கே ஆபத்தாக மாறும் அபாயம் இருக்கின்றது என்று அமெரிக்க சுகாதாரத் துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, Drug addiction, Viral Video