கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ட்ரம்புடன் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ட்ரம்புடன் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!
  • News18
  • Last Updated: February 10, 2020, 9:34 AM IST
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ தாண்டியுள்ள நிலையில், தொலைபேசியில் இன்று காலை டிரம்பை தொடர்பு கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைத்து வருவதாகவும், அந்த வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை சீனாவுக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு பிறகே நோய்த் தொற்றுக்கான அறிகுறியே தென்படும் என கூறப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே வைரஸ் பரவல் அதிவேகமாக நிகழ்வதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஜப்பான் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 41 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


கப்பலில் இருந்த 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் யோகோஹாமா துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 3 ஆயிரத்து 700 பேர் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து கப்பலிலேயே தங்க வைக்கப்படுவார்கள் என ஜப்பான் நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Also see...
 

 
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்