ஹோம் /நியூஸ் /உலகம் /

மூன்றாம் முறை அதிபராகும் ஜி ஜின்பிங்? - சீனா அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிரடி திருத்தம்!

மூன்றாம் முறை அதிபராகும் ஜி ஜின்பிங்? - சீனா அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிரடி திருத்தம்!

சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவோ

சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவோ

சீன அதிபராக ஜி ஜின்பிங் நீடிக்க வகை செய்யும் அரசியலமை சட்ட திருத்தத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaBeijingBeijing

  ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாடு கடந்த 16ம் தேதி தொடங்கியது. ஒரு வாரக்காலம் நடைபெற்ற மாநாடு, சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் நாடுமுழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,296 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்கள் 205 முழுநேர உறுப்பினர்கள், 171 மாற்று உறுப்பினர்கள் என 376 பேர் கொண்ட மத்திய குழுவை தேர்வு செய்தனர்.

  தேர்வு செய்யப்பட்ட மத்தியக் குழுவினர் ஞாயிற்றுக் கிழமை கூடி, அதிக அதிகாரம் கொண்ட 7 உறுப்பினர்களை கொண்ட பொலிட் பியூரோ-வை தேர்ந்தெடுப்பார்கள். இந்த பொலிட் பியூரோதான் கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும். பொதுச்செயலாளராக வருபவர்தான் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  அந்த வகையில் ஏற்கெனவே கட்சியின் பொதுச்செயலாளராக ஜி ஜின்பிங்கை மத்தியக் குழு முன்மொழிந்துவிட்டது. இதனால் ஜி ஜின்பிங் 3வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மாவோவுக்கு அடுத்து அதிகமான காலம் அதிபராக இருப்பவர் என்ற பெருமையை ஜி ஜின்பிங் பெற உள்ளார்.

  இதையும் படிங்க: தொடரும் அதிர்ச்சி! - 99 குழந்தைகள் பலி.. இருமல் சிரப்புகளுக்கு தடை விதித்த இந்தோனேசியா!

  இதனிடையே தற்போதைய பிரதமரும், கட்சி அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பவருமான லி கெகியாங் பொலிட் பீரோவுக்கு மீண்டும் தேர்வாகவில்லை. இதேப்போல் ஷாங்காய் தலைவர் ஹான் ஜெங், கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவர் வாங் யாங் ஆகியோரும் பொலிட் பீரோ உறுப்பினர்களாக மீண்டும் தேர்வு செய்யப்பட்வில்லை .

  இதனிடையை, முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவோ, பொதுக்குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் ஜி ஜின்பிங் அருகே அமர்ந்திருந்த ஹு ஜிண்டாவோ திடீரென சில அதிகாரிகளால் கூட்டத்திலிருந்து அழைத்துச் செல்லப்படும் காட்சி வெளியாகியுள்ளது. இது வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஹு ஜிண்டாவோ வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரா என்று பலரும் புகார் அளித்த நிலையில், அவர் உடல் நலக்கோளாறு காரணமாக தான் வெளியே சென்றார் என சீனாவின் அரசு ஊடகம் விளக்கம் அளித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: China, Xi jinping