ஹோம் /நியூஸ் /உலகம் /

மூன்றாம் முறை சீனாவின் அதிபரானார் ஜி ஜின்பிங்..! - மாவோவை தொடர்ந்து வரலாற்று சாதனை படைத்தார்!

மூன்றாம் முறை சீனாவின் அதிபரானார் ஜி ஜின்பிங்..! - மாவோவை தொடர்ந்து வரலாற்று சாதனை படைத்தார்!

அதிபர் ஜி ஜின்பிங்

அதிபர் ஜி ஜின்பிங்

சீனாவின் அதிபராக மூன்றாம் முறை ஜி ஜின்பிங் தேர்வாகியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • internati, IndiaBeijing Beijing Beijing

    சீனாவின் அதிபராக மூன்றாம் முறை ஜி ஜின்பிங் தேர்வாகியுள்ளார். சீனா வரலாற்றில் மாவோவிற்கு பின்பு பெரிய சக்திவாய்ந்த தலைவராக அதிபர் ஜி ஜின்பிங் உருவெடுத்துள்ளார். 

    சீனாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் - யை மீண்டும் அதிபராகத் தேர்வு செய்துள்ளனர்.

    சீனா அரசியல் அமைப்பு படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் கூடி பொதுக்குழு மூலம் நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுப்பர். அந்த வகையில் அதிபர் ஜி ஜின்பிங் பதவி காலம் முடிவடைந்த நிலையில் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாடு கடந்த 16ம் தேதி தொடங்கியது.

    தற்போது மாநாடு முடிவடைந்த நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாம் முறை சீனாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீனா அரசியல் வரலாற்றில் சீனாவைக் குடியரசு நாடாக மாற்றி மாபெரும் தலைவராக ஆட்சி அமைத்த மாவோவிற்கு பின்பு, அதிபர் ஜி ஜின்பிங் பெரிய சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.

    Also Read : மூன்றாம் முறை அதிபராகும் ஜி ஜின்பிங்? - சீனா அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிரடி திருத்தம்!

    இதற்குப் பின் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அதிபர்  ஜி ஜின்பிங் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியை அமைத்துள்ளார். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நிகழ்ச்சியில் பேசிய ஜி ஜின்பிங், கட்சித் தலைவர்களுக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

    மேலும் உலகத்திற்குச் சீனா தேவை என்றும் சீனாவின் முன்னேற்றத்திற்கு உலக தேவை என்றும் கூறியுள்ளார். 69 வயதான அதிபர் ஜி ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், நாட்டின் அதிபராகவும் மற்றும் ராணுவத்தின் தலைவராகவும் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Janvi
    First published:

    Tags: China, President, Xi jinping