• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42,000-ஐத் தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42,000-ஐத் தாண்டியது!

கோப்புப்படம்

கோப்புப்படம்

பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் பிடித்துள்ள நிலையில் அங்கு நேற்று மட்டும் 499 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42,000-ஐத் கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 4,356 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் சுமார் 24,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 726 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 3,867 ஆக அதிகரித்துள்ளது.

    இத்தாலியில் 1 லட்சத்து 5,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12, 428 ஆக அதிகரித்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 837 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினிலும் கொரோனாவால் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் 748 பேர் கொரோனாவால் மாண்டுள்ளனர். பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் பிடித்துள்ள நிலையில் அங்கு நேற்று மட்டும் 499 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்சில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,523 ஆக அதிகரித்துள்ளது.

    பிரான்ஸைப்போலவே பிரிட்டனிலும் கொரோனா அதிவேகத்தில் பரவி வருகிறது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,150 பேராகவும் கடந்த 24 மணி நேரத்தில் 381 உயிரிழப்புகளுடன் பலியானோர் எண்ணிக்கை 1,789 ஆக உயர்ந்துள்ளது.

    Also see...





    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: