Home /News /international /

உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56,000-ஆக அதிகரிப்பு!

உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56,000-ஆக அதிகரிப்பு!

கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களில் இரண்டு லட்சத்து 24,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களில் இரண்டு லட்சத்து 24,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களில் இரண்டு லட்சத்து 24,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    கொரோனா பெருந்தொற்றால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56,000-ஐக் கடந்துள்ளது. இத்தாலியில் 766 பேரும், இங்கிலாந்தில் 684 பேரும், அமெரிக்காவில் 488 பேரும் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவால் உலகம் முழுவதும் பத்தரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டும் இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 488 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்நாட்டில் பலி எண்ணிக்கை 6,500-ஆக அதிகரித்துள்ளது.

    ஸ்பெயின் நாட்டிலும் ஒரே நாளில் 932 பேர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. ஒரு லட்சத்து 17,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 24 மணிநேரத்தில் 684 பேர் பலியானதை தொடர்ந்து, அங்கும் பலி எண்ணிக்கை 3,605-ஆக உயர்ந்துள்ளது.

    இத்தாலியில் புதியதாக 766 பேர் உயிரிழந்தை தொடர்ந்து  14,000 பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55,780-ஆக அதிகரித்துள்ளது. இதில் இரண்டு லட்சத்து 24,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...





    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி